அல்தமஸ் கபீர்

அல்தமஸ் கபீர் (பிறப்பு: 19 ஜூலை 1948 - இறப்பு: 19 பெப்ரவரி 2017) இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆவார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் அதனைத் தொடர்ந்து சட்டமும் பயின்ற இவர் 1973 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா மாவட்ட நீதிமன்றத்திலும் குடிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் நாள் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்றார். 2005 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் பொறுப்புத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். அதே ஆண்டில் மார்ச் மாதம் 1 ஆம் தேதி தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார். பின்னர் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதியில் இந்தியாவின் உயரிய நீதி அமைப்பான இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆனார். பின்னர் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கபாடியா ஒய்வு பெற்றதை அடுத்து 39 ஆவது இந்தியத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[1]

அல்தமஸ் கபீர்

மேற்கோள்கள்

தொகு
  1. "சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக அல்தமஸ் கபீர் பதவியேற்பு". தினமலர். 30 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
நீதித்துறை அலுவல்கள்
முன்னர்
எஸ். எச். கபாடியா
இந்தியத் தலைமை நீதிபதி
29 September 2012 – 18 July 2013
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்தமஸ்_கபீர்&oldid=3841988" இலிருந்து மீள்விக்கப்பட்டது