அல்லரி சுபாஷினி

இந்திய நடிகை

அல்லரி சுபாஷினி (இயற்பெயர்:திருமலா சுபாஷினி) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த நடிகையாவார்.[1] தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.[2]

அல்லரி சுபாஷினி
பிறப்புதிருமலா சுபாஷினி
பீமவரம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப்_பிரதேசம்
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2002 ஆம் ஆண்டு முதல்

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

ஆந்திர மாநிலத்தின் பீமாவரத்தைச் சேர்ந்த இவர்,பள்ளியில் படிக்கும் போதே தனது தந்தையை இழந்துள்ளார். அதனால் ஏழாம் வகுப்பு வரையே படித்துள்ளார். குடும்ப கஷ்டம் காரணமாக மிக இளம் வயதிலேயே திருமணமும் நடந்துள்ளது. சிறுவயதிலிருந்தே மேடை நாடகங்களில் நடித்து வந்துள்ள இவர், 2002 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில், அம்மா, அக்கா போன்ற வேடங்களில் நடித்துவருகிறார்.

தொழில் தொகு

சிந்தாமணி என்ற மேடை நாடக நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்ற போது, இவரது நடிப்பைக் கண்ட நடிகர் சலபதி ராவ், அல்லரி என்ற புதிய படத்தைத் தயாரித்து வரும் தனது மகன் ரவிபாபுவை அணுகுமாறு இவரிடம் அறிவுறுத்தினார். அதன்படி அந்தப் படத்தில் இவருக்கு அம்மா வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் இவரது நடிப்பு அவருக்கு நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்து, பல்வேறு திரைப்பட வாய்ப்புகளை தேடி கொடுத்தது. அதைத்தொடர்ந்து தனது இயற்பெயர் திருமலா என்பதை ''அல்லரி'' சுபாஷினி என்று மாற்றி பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். கிருஷ்ண வம்சி இயக்கிய ஸ்ரீ ஆஞ்சநேயத்தில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளார். பாலகிருஷ்ணா, என்டிஆர், நாகார்ஜுனா, சிரஞ்சீவி, ரஜினிகாந்த் போன்ற பிரபல ஆந்திர, தமிழ்நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வரும் இவர், தற்காலிகமாக நடிப்பிற்கு இடைவெளி விட்டுள்ளார்,[3]

திரைப்படவியல் தொகு

  • அல்லரி (2002)
  • சென்னகேசவ ரெட்டி (2002)
  • ஈஸ்வர் (2002)
  • ஸ்ரீ ஆஞ்சநேயம் (2004)
  • காஞ்சனமாலா கேபிள் டிவி (2005)
  • கிதகிதலு (2006)
  • சத்யபாமா (2007) உணவக மேலாளராக
  • நச்சாவுலே (2008)
  • பெண்டு அப்பாராவ் ஆர்எம்பி (2009)
  • அமராவதி (2009)
  • பணம் பணம், அதிக பணம் (2011)
  • ஆகாசமே ஹட்டு (2011)
  • சுடிகாடு (2012)
  • சூர்யா vs சூர்யா (2015)
  • குண்டூர் டாக்கீஸ் (2016)
  • பார்வதிபுரம் (2016) ரங்கநாயகி

மேற்கோள்கள் தொகு

  1. "Telugu Movie Actress Allari Subhashini". nettv4u.com. பார்க்கப்பட்ட நாள் 14 September 2016.
  2. "Allari Subhashini Telugu Movie Actress". 99doing.com. பார்க்கப்பட்ட நாள் 14 September 2016.
  3. "Actress Allari Subhashini Reveals Anchor Suma Kanakala is the Reason Why She is Healthy". News18 (in ஆங்கிலம்). 2022-07-11. பார்க்கப்பட்ட நாள் 2023-03-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லரி_சுபாஷினி&oldid=3679797" இலிருந்து மீள்விக்கப்பட்டது