அல்லாடி குப்புசாமி
நீதிபதி அல்லாடி குப்புசாமி (Alladi Kuppu Swamy)(1920-2012) என்பவர் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார்.[1]
அல்லாடி குப்புசாமி Alladi Kuppu Swami | |
---|---|
தலைமை நீதிபதி - ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் | |
பதவியில் 1980–1982 | |
முன்னையவர் | சாலா கொண்டையா |
பின்னவர் | கே. மாதவரெட்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 மார்ச்சு 1920 |
இறப்பு | 12 மார்ச்சு 2012 |
அல்லாடி கிருஷ்ணசசாமி ஐயரின் மகனான இவர் 23 மார்ச் 1920-ல் பிறந்தார். சென்னை இலயோலாக் கல்லூரியில் இளங்கலையும் சென்னை, சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டக் கல்வியும் பயின்றார். இவர் 1939-ல் முதல் வகுப்பில் இளநிலை கணிதப் பட்டம் பெற்றார். 1939-41-ல் சட்டம் பயின்றார். இவர் மறைந்த ஸ்ரீ வி. கோவிந்தராஜாச்சாரியிடம் வழக்கறிஞர் பயிற்சியினைப் பெற்றார். 1942-ல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். இவர் ஆந்திரப் பிரதேச வழக்கறிஞர் கழக உறுப்பினராக 1961 முதல் 1967 வரை இருந்தார்.
குப்புசாமி, 12 மார்ச் 2012 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் ஐதராபாத்தில் மாரடைப்பால் இறந்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Profile of Alladi Kuppu Swami at Andhra Pradesh High Court". பார்க்கப்பட்ட நாள் 19 October 2009.
- ↑ Alladi Kuppu Swamy passes away