அல்லாஹ் தினோ கவாஜா

பாக்கித்தான் காவல்துறை அதிகாரி

அல்லாஹ் தினோ கவாஜா (ஆங்கிலம் : Allah Dino Khawaja ) ( சிந்தி மொழி: الله ڏنو خواجا‎ ) இவர் ஒரு பாக்கித்தான் காவல்துறை அதிகாரி ஆவார், அவர் பிபிஎஸ் -22 தரத்தில் (பணியாற்றும் அதிகாரிக்கு மிக உயர்ந்த பதவி) தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மோட்டார்வே காவல்துறை தலைவராக பணியாற்றுகிறார் . கவாஜா முக்கிய அதிகாரிகளான ஃபவாத் ஹசன் ஃபவாத் (பிஏஎஸ்), ரிஸ்வான் அகமது (பிஏஎஸ்), சிக்கந்தர் சுல்தான் ராஜா (பிஏஎஸ்) மற்றும் ஜவாத் ரபீக் மாலிக் (பிஏஎஸ்) ஆகியோருடன் காவல் துறையில் உடன் பயிற்சி எடுத்தவர் [1] [2] [3] [4] [5]

கவாஜா மார்ச் 2016 முதல் ஜூன் 2018 வரை சிந்து காவல்துறை தலைவராக இருந்த காலத்தில் சில கடுமையான முடிவுகளை எடுத்து,பாக்கித்தான் மற்றும் கராச்சி நடவடிக்கைகளின் தேசிய செயல் திட்டத்தை செயல்படுத்தினார். [6] [7] சிந்துவின் காவல் துறைத் தலைவராக இருந்த காலத்தில், சிந்து மாகாணத்தில் காவல் அமைப்பில் சீர்திருத்தங்களைத் தொடங்கினார் மற்றும் கராச்சி நகரில் சி.சி.டி.வி கண்காணிப்பு முறையைத் ஒழுங்குபடுத்தியுள்ளார். சிந்துவின் வரலாற்றில் முதன்முறையாக, காவல் துறைத் தலைவர் அல்லாஹ் தினோ கவாஜாவின் தலைமையில், பாக்கித்தான் இராணுவத்தால் நம்பகமான சோதனை மூலமும் மற்றும் உடல் பரிசோதனை மூலமும் காவலர்கள் தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். [8]

ஆரம்பகால வாழ்க்கை தொகு

கவாஜா ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்   [9] தான்டோ முஹம்மது கான் மாவட்டத்தில். அவர் பெடாரோ என்ற கேடட் கல்லூரியில் சேர்ந்தார், அங்கிருந்து அவர் இடைநிலைக் கல்வியை முடித்தார்   அதன்பிறகு 1982 இல்., கவாஜா சிந்து பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் முதுகலை முடித்தார். [10]

தொழில் தொகு

கவாஜா சிந்துவின் பல்வேறு மாவட்டங்களில் மூத்த காவல்துறை கண்காணிப்பாளராகவும், கராச்சியில் தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் காவல் துறை து/னைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். புலனாய்வுப் பணியகத்தில் (ஐபி) கூட்டு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.. [9]

அவர் தொலைதொடர்புக்கான காவல் துறை து/னைத் தலைவராகவும், சிந்துவின் ஊழல் தடுப்புத் துறையின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். கவாஜா இரண்டு முதலமைச்சர்களான சையத் முசாபர் உசேன் ஷா மற்றும் சையத் அப்துல்லா அலி ஷா ஆகியோரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். [10]

மார்ச் 2016 இல் கவாஜா சிந்துவின் காவல்துறைத் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டு, ஜூன் 2018 வரை மாகாண உயர் காவல் அதிகாரியாக பணியாற்றினார். செப்டம்பர் 2018 இல், பிரதமர் இம்ரான் கான் கவாஜாவை தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மோட்டார்வே காவல்துறை தலைவராக நியமித்தார். [11]

குறிப்புகள் தொகு

  1. "A tale of patties and pastries". Tribune.com.pk. பார்க்கப்பட்ட நாள் 9 August 2018.
  2. Fawad Hasan Fawad (PAS),
  3. "Archived copy". Archived from the original on 2018-08-09. பார்க்கப்பட்ட நாள் 2018-08-09.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "AD Khawaja appointed new IG Sindh". Tribune.com.pk. 12 March 2016. Archived from the original on 9 November 2017. பார்க்கப்பட்ட நாள் 9 November 2017.
  5. "15th Common officials — a 'darling' group of ruling govt". Pakistantoday.com.pk. Archived from the original on 14 February 2018. பார்க்கப்பட்ட நாள் 6 May 2018.
  6. "Sindh Police". Sindhpolice.gov.pk. Archived from the original on 2018-05-24. பார்க்கப்பட்ட நாள் 2018-05-24.
  7. "Sindh Police Official Website". Sindhpolice.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 2018-05-24.
  8. "Sindh Police constables appointed on merit this time". Thenews.com.pk (in ஆங்கிலம்). Archived from the original on 2017-11-10. பார்க்கப்பட்ட நாள் 2018-02-21.
  9. 9.0 9.1 "Time To See The New Face Of The Sindh Police Department". Parhlo.com. Archived from the original on 28 March 2018. பார்க்கப்பட்ட நாள் 27 March 2018.
  10. 10.0 10.1 "Man who patrolled streets as milk seller to uncover corrupt cops takes charge as new IG". Tribune.com.pk. Archived from the original on 28 March 2018. பார்க்கப்பட்ட நாள் 27 March 2018.
  11. "AD Khawaja appointed new IG Sindh". Tribune.com.pk. Archived from the original on 28 March 2018. பார்க்கப்பட்ட நாள் 27 March 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லாஹ்_தினோ_கவாஜா&oldid=3704781" இலிருந்து மீள்விக்கப்பட்டது