அல்லைல் கிளைசிடைல் ஈதர்

வேதிச் சேர்மம்

அல்லைல் கிளைசிடைல் ஈதர் என்பது பசைகள் மற்றும் முத்திரைகள் குத்த பயன்படும் அரக்கு போன்றவை செய்ய பயன்படுத்தப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். மேற்கண்ட தயாரிப்பு பலபடியாக்கல் வினைகளில் பயன்படும் ஒரு ஒற்றைப்படியாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. இது அல்லைல் ஆல்ககால் மற்றும் கிளைசிடால் ஆகியவை இணைந்து குறுக்க வினைக்குட்பட்டு ஈதர் பிணைப்பின் வழியாக இணைக்கப்பட்ட ஒரு விளைபொருள் ஆகும். இது ஒரு அல்கீன் மற்றும் ஒரு எப்பாக்சைடு குழு இரண்டையும் கொண்டிருப்பதால், ஒரு வேதிவினைக்குழுவானது ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து வினையாற்றும் போது மற்றொரு வினை செயல் தொகுதி அப்படியே இருக்கும்.

தயாரிப்பு தொகு

இந்த சேர்மத்தின் தொழில்துறை தயாரிப்பு என்பது அல்லைல் ஆல்ககால் மற்றும் எபிக்குளோரோஐதரின் இடையேயான வினை ஆகும். இந்த ஒடுக்க வினையின் துணை விளைபொருளான ஐதரசன் குளோரைடு அடுத்ததான காரத்துடனான வினையின் மூலம் நீக்கப்படுகிறது. [1]

 
அல்லில் ஆல்கஹால் மற்றும் எபிக்ளோரோஹைட்ரின் ஒடுக்கம் மூலம் அல்லில் கிளைசிடில் ஈதரின் தொகுப்பு

இந்த வேதிப்பொருளானது டைஅல்லைல் ஈதரின் இரண்டில் ஒரு ஆல்க்கீனை பெரசிட்டிக் அமிலம் அல்லது பெராக்சைடு (TBHP அல்லது H2O2) கொண்டு பல்வேறு டைட்டானியம் வினையூக்கிகளின் முன்னிலையில் எப்பாக்சிஜனேற்றம் செய்வதன் மூலமும் தயாரிக்கப்படுகிறது.

 
டயல் ஈதரின் எபோக்சிடேஷன் மூலம் அல்லில் கிளைசிடில் ஈதரின் தொகுப்பு

இரண்டாவது அல்கீனின் அடுத்தடுத்த ஆக்சிஜனேற்றம் டைகிளைசிடைல் ஈதரை உருவாக்கும்.

அல்லைல் கிளைசிடைல் ஈதர் சீர்மைத்தன்மையற்றதாகும். இது இரண்டு ஆடிஎதிருரு வடிவங்களைக் கொண்டுள்ளது. ஒரு அல்லைல் தொகுதியின் எளிமையான எபாக்சிசனேற்றம் ஒரு சுழிமாய்க் கலவையைத் தருகிறது. அதே நேரத்தில் அளிக்கும் அதே வேளையில், ஒரு மோனாக்சிஜீனேஸ் என்ற நொதியால் நுண்ணுயிர் ஆக்சிசனேற்றம் நிகழ்த்தப்படும் போது எதிர்உருவமை தெரிவு முடிவினை அளிக்கிறது. [2]

 
டயல் ஈதரின் நுண்ணுயிர் எபோக்சிடேஷன் மூலம் அல்லில் கிளைசிடில் ஈதரின் என்ன்டியோசெலெக்டிவ் தொகுப்பு

மாற்றாக, ஓரிணைய டோசைலட்டின் மீதான ஈரிணைய ஆல்ககாலின் அணுக்கருக் கவர் வளையமாக்கல் வினை சமச்சீரற்ற எப்பாக்சைடு விளைபொருளை அளிக்கிறது. [3]

 
அசைலிக் ஆல்கஹாலின் ஒற்றை என்ன்டியோமரை சுழற்சி செய்வதன் மூலம் அல்லைல் கிளைசிடில் ஈதரின் ஒற்றை என்ன்டியோமரின் தொகுப்பு

பயன்கள் தொகு

அல்லைல் கிளைசிடைல் ஈதர் பசைகள் மற்றும் முத்திரைகளுக்கான அரக்கு மற்றும் பல்வேறு வகையான பலபடி தயாரிப்புகளுக்கு ஒரு தொடக்க நிலை ஒற்றைப்படியாக பயன்படுத்தப்படுகிறது.

வினைகள் தொகு

பலபடியாக்கல் தொகு

ஒரு இருநிலை செயல்படு தன்மை கொண்ட சேர்மமாக, அல்கீன் தொகுதி அல்லது எப்பாக்சைடு தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் வினைபுரிந்து ஒரு விளைபொருளைத் தரும். மற்ற வினைபடு தொகுதி எதிர்கால வினைகளுக்காக செயல்படாமல் அப்படியே இருக்கும். எடுத்துக்காட்டாக, அவற்றில் ஒன்று நேரியல் பலபடியாக்கல் வினைக்கும், மற்றொன்று குறுக்குத் தொடர்பிணைப்பிற்கும் பயன்படுத்தப்படலாம். [4]

மெத்தில் அக்ரிலேட்டு முன்னிலையில் இச்சேர்மத்தின் புரோப்பைலீன் பகுதியின் தீவிர பலபடியாக்கல் அதிக எப்பாக்சைடு உள்ளடக்கத்துடன் ஒரு தொகுதி இணைப்பலபடியை அளிக்கிறது.[5] இதேபோல், பாலிவினைல்காப்ரோலாக்டம் உற்பத்தியில் கரியணுத்தொடர் பரிமாற்றக் காரணியாக இதைப் பயன்படுத்தலாம். [6]

உட்கரு கவர் எப்பாக்சைடு தொகுதிகளின் பலபடியாக்கல் அல்லைல்-ஈதர் இணை அணுத்தொடருடன் பாலிஎதிலீன் கிளைக்கால் போன்ற முதன்மை கரியணுத் தொடரைக் கொண்ட ஒரு பொருளைக் கொடுக்கிறது. கூடுதல் லூயி காரத்தன்மை கொண்ட ஈதர் தளங்கள் பலபடியில் அயனிப் போக்குவரத்தையும் மற்றும் உலோக அயனிகளின் முன்னிலையில் நிலையற்ற இடை-சங்கிலி குறுக்கு இணைப்பு மற்றும் கண்ணாடி மாற்றம் வெப்பநிலையையும் பாதிக்கின்றன. லித்தியம் அயனி மின்கலங்களுக்கான மாற்று மின்பகுளிகளாக இச்சேர்மத்தின் பயன்பாடுகள் இருக்கலாம் என்று இந்த பண்புகள் தெரிவிக்கின்றன.

ஐதரோசிலைலேற்றம் தொகு

பலபடியாக்கலைக் காட்டிலும், ஆல்க்கீன் தொகுதியானது, குளோரோபிளாட்டினிக் அமிலம் முன்னிலையில் சிலாக்சேனுடனான வினையில் ஐதரோசிலைலேற்றத்தில் ஈடுபடுகிறது.[7] பலபடியாக்கல் வினையைப் போன்று, இந்த வினையானது எப்பாக்சைடை வினைபுரியா நிலையில் விட்டுவிடுகிறது. இந்த வினையின் காரணமாக, அல்லைல் கிளைசிடைல் ஈதரானது மின்துறைப் பயன்பாடுகளில் பயன்படும் சிலேன் மேற்பூச்சுகள் உற்பத்தியில் இடைவினப் பொருளாக பயன்பாட்டைக் கொண்டுள்ளது.[8]

மேற்கோள்கள் தொகு

  1. Patty's Industrial Hygiene and Toxicology. John Wiley Sons. 1991. https://archive.org/details/pattysindustrial0000unse. 
  2. Fu, Hong; Newcomb, Martin; Wong, Chi Huey (1991). "Pseudomonas oleovorans monooxygenase-catalyzed asymmetric epoxidation of allyl alcohol derivatives and hydroxylation of a hypersensitive radical probe with the radical ring-opening rate exceeding the oxygen-rebound rate". J. Am. Chem. Soc. 113 (15): 5878–5880. doi:10.1021/ja00015a061. 
  3. Pederson, Richard L.; Liu, Kevin K. C.; Rutan, James F.; Chen, Lihren; Wong, Chi Huey (1990). "Enzymes in organic synthesis: synthesis of highly enantiomerically pure 1,2-epoxy aldehydes, epoxy alcohols, thiirane, aziridine, and glyceraldehyde 3-phosphate". J. Org. Chem. 55 (16): 4897–4901. doi:10.1021/jo00303a026. 
  4. Frostick, Frederick C., Jr.; Phillips, Benjamin; Starcher, Paul S. (1959). "Synthesis of Some Epoxy Vinyl Monomers by Epoxidation with Peracetic Acid". J. Am. Chem. Soc. 81 (13): 3350–3356. doi:10.1021/ja01522a048. 
  5. Qingbo, Yu; Mingxu, Zhang; Xianhua, Li; Ruke, Bai (October 2007). "Living free-radical copolymerization of allyl glycidyl ether with methyl acrylate". Frontiers of Chemistry in China 2 (4): 414–418. doi:10.1007/s11458-007-0078-5. 
  6. Kudyshkin, Mukhitdinova. "Control of the molecular weight of polyvinylcaprolactam". Russian Journal of Applied Chemistry 72 (10): 1846–1848. 
  7. "Allyl glycidyl ether". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் December 24, 2018.
  8. Ash, Michael; Ash, Irene, தொகுப்பாசிரியர்கள் (2007). Handbook of Fillers, Extenders, and Diluents. Synapse Info Resources. பக். 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781890595968. https://books.google.com/books?id=C4Cr8dHupVsC&pg=PA224. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லைல்_கிளைசிடைல்_ஈதர்&oldid=3582532" இலிருந்து மீள்விக்கப்பட்டது