மூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு
மூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு (tert-Butyl hydroperoxide) என்பது C4H10O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம வேதியியல் பெராக்சைடான இச்சேர்மம் பல்வேறு வகையான ஆக்சிசனேற்ற செயல்முறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக சார்ப்லெசு எப்பாக்சினேற்ற வினையைக் குறிப்பிடலாம். பொதுவாக இது 69–70% நீரிய கரைசலாகவே வழங்கப்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்புரோப்பேன்-2-பெராக்சோல்[1] | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
மூவிணைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு | |||
இனங்காட்டிகள் | |||
75-91-2 | |||
Abbreviations | TBHP | ||
Beilstein Reference
|
1098280 | ||
ChEMBL | ChEMBL348399 | ||
ChemSpider | 6170 | ||
EC number | 200-915-7 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
ம.பா.த | tert-Butylhydroperoxide | ||
பப்கெம் | 6410 | ||
வே.ந.வி.ப எண் | EQ4900000 | ||
| |||
UNII | 955VYL842B | ||
UN number | 3109 | ||
பண்புகள் | |||
C4H10O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 90.12 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 0.935 கி/மி.லி | ||
உருகுநிலை | −3 °C (27 °F; 270 K) | ||
கொதிநிலை | 37 °C (99 °F; 310 K) at 2.0 kPa | ||
கலக்கும் | |||
மட. P | 1.23 | ||
காடித்தன்மை எண் (pKa) | 12.69 | ||
காரத்தன்மை எண் (pKb) | 1.31 | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.3870 | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−294±5 கிலோயூல்/மோல் | ||
Std enthalpy of combustion ΔcH |
2.710±0.005 மெகாயூல்/மோல் | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | [1] | ||
GHS pictograms | |||
GHS signal word | அபாயம் | ||
H226, H242, H302, H311, H314, H317, H331, H341, H411 | |||
P220, P261, P273, P280, P305+351+338, P310 | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 43 °C (109 °F; 316 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
பயன்கள்
தொகுமூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு தொழிற்சாலைகளில் தனியுறுப்பு பலபடியாக்கும் முன்னெடுப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
தொகுமூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடைத் தயாரிப்பதற்கான செயற்கைத் தயாரிப்பு முறைகள் பல பயன்பாட்டில் உள்ளன:[3]
- ஐதரசன் பெராக்சைடுடன் ஐசோபியூட்டைலீன் அல்லதுகந்தக அமிலத்தின் முன்னிலையில் மூவினைய பியூட்டைல் ஆல்ககால் வினை
- ஐசோபியூட்டேன் மற்றும் ஆக்சிசன் ஆகியவற்றின் தன்னாக்சிசனேற்ற வினை.
தற்காப்பு நடவடிக்கைகள்
தொகு- மூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு ஒரு விதிவிலக்கற்ற வினைத்திறன் மிக்கதொரு அபாயகரமான வேதிப்பொருளாகும். தோல் மற்றும் சளிச்சவ்வுகளில் எரிச்சலையும் உள்ளிழுக்க நேர்ந்தால் மூச்சுப்பாதைகளில் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்[4].
- மூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடுடன் தண்ணீர் சேர்க்கப்பட்டுள்ள 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட கரைசல் அமெரிக்காவில் அட்டவணை 49 இன் படி தடை செய்யப்பட்டுள்ளது.
உடல்நலத்திற்கான தரவரிசை எண் 4, தீப்பிடித்தலுக்கான தரவரிசை எண் 4, வினைத்திறனுக்கான தரவரிசை எண் 4 என இச்சேர்மத்திற்கான தீங்குகளை தேசிய தீத்தடுப்பு நிறுவனம் தர அட்டவணைப் படுத்தியுள்ளது. மேலும் இச்சேர்மம் வினைத்திறனுள்ள ஆக்சிகரணியாகும். இருப்பினும் இதர தயாரிப்பு முறைகளின் தரவரிசை எண்கள் 3-2-2 அல்லது 1-4-4 ஆகும்[5] however other sources claim lower ratings of 3-2-2 or 1-4-4.[6][7].
மேற்கோள்கள்
தொகு- ↑ "IUPAC Complete Draft 2004" (PDF). Archived from the original (PDF) on 2017-03-28. பார்க்கப்பட்ட நாள் 2018-09-30.
- ↑ Cameo Chemicals, reference for NFPA values.
- ↑ "Peroxides and Peroxide Compounds, Organic Peroxides". Kirk‑Othmer Encyclopedia of Chemical Technology. Wiley-VCH Verlag GmbH & Co.. DOI:10.1002/0471238961.1518070119011403.a01.
- ↑ Sigma Aldrich MSDS
- ↑ "TERT-BUTYL HYDROPEROXIDE" at CAMEO Chemicals NOAA
- ↑ tert-BUTYL HYDROPEROXIDE at Chemicalland21
- ↑ tert-Butyl hydroperoxide at http://environmentalchemistry.com