அல்வரோ மோர்தே
அல்வாரோ அந்தோணியோ கார்சியா பெரேசு (Álvaro Antonio García Pérez) [1] (பிறப்பு 23 பிப்ரவரி 1975), மேடைப் பெயரான அல்வரோ மோர்தே என்று அழைக்கப்படுபவர், ஓர் எசுப்பானிய நடிகர் ஆவார். மணி ஹெய்ஸ்ட் என்ற தொலைக்காட்சித் தொடரில் தெ புரொபசர் என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். [2] [3]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅல்வரோ அந்தோணியோ கார்சியா பெரேசு [4] 1975 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி அல்ஜெசிராஸில் பிறந்தார். பின்னர் தனது குடும்பத்துடன் கோர்டோபாவில் உள்ள புஜாலன்சுக்கு இடம்பெயர்ந்தார். [5]
மின்னணுப் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்ற இவர், 1999 இல் எஸ்க்யூலா சுப்பீரியர் டி ஆர்ட் டிராம்டிகோ டி கோர்டோபாவில் நாடகக் கலையில் பட்டம்பெற்றார். இவர், தம்பேர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.[6] பின்லாந்தில் சிறிது காலம் இருந்த பிறகு, இவர் மத்ரித்தில் குடியேறினார். [7] 33 வயதில், இவருக்கு இடது தொடையில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார். [8] [9]
தொழில் வாழ்க்கை
தொகுஎசுப்பானிய தொலைக்காட்சித் தொடரான ஹாஸ்பிடல் சென்ட்ரலில் சிறிய பாத்திரத்தில் நடித்தபோது மோர்தே தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். பல எசுப்பானிய பிராந்திய தொலைக்காட்சி அலைவரிகளில் ஒளிபரப்பப்பட்ட பிளாண்டா 25 தொலைக்காட்சித் தொடரில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Álvaro Morte, en el punto de mira". revistamine (in ஸ்பானிஷ்). 2019-01-28. பார்க்கப்பட்ட நாள் 2020-12-24.
- ↑ "Is La Casa De Papel aka Money Heist Season 4 the Final Season acc. to the Show Runner? Release Date, Plot, Cast & More". Union Journalism (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-09. Archived from the original on 2020-04-07. பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.
- ↑ Hill-Paul, Lucas (2020-03-06). "Money Heist season 4: Berlin's shock return confirmed in all-new Netflix trailer". Express.co.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.
- ↑ Lakunza, Rosana (23 October 2020). "Diez cosas que (igual) no sabías de... Álvaro Morte". Noticias de Gipuzkoa.
- ↑ Elidrissi, Fátima (12 June 2020). "El pasado de culebrones y series de Álvaro Morte, el Profesor de 'La casa de papel'". El Mundo.
- ↑ Roca, Ana (15 August 2020). "Álvaro Morte, el éxito inesperado de un hombre tranquilo". El País.
- ↑ Fernández Paz, Martín (29 July 2019). "La lucha contra el cáncer y la vida sobria de Álvaro Morte, El Profesor de "La Casa de Papel"". Teleshow. Infobae.
- ↑ Andrés, Silvia de (3 April 2020). "Mujer, dos hijos y una victoria contra el cáncer: la vida real de Álvaro Morte más allá de la pantalla". Divinity.
- ↑ "Álvaro Morte: "Me preparé al estilo Clooney y me pidieron que hiciera un personaje más friki". La Vanguardia. 25 October 2020.