அல்வார் இந்திரா காந்தி விளையாட்டரங்கம்
இந்திரா காந்தி விளையாட்டரங்கம் (Indira Gandhi Stadium) இந்தியாவின் இராசத்தான் மாநிலம் அல்வார் நகரத்தில் உள்ளது. பல்நோக்கு விளையாட்டு அரங்கமான இங்கு கால்பந்து , வளைகோல் பந்தாட்டம் மற்றும் பிற விளையாட்டுகளுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1993 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் இராசத்தான் துடுப்பாட்ட அணி விதர்பா துடுப்பாட்ட அணியை எதிர்த்து விளையாடிய ரஞ்சிக் கோப்பை துடுப்பாட்டப் போட்டி இங்கு நடைபெற்றது.[1] இதைத் தவிர மேலும் நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளன. கடைசியாக 1995/1996 ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை போட்டியில் தெற்கு மண்டல துடுப்பாட்ட அணியும் மேற்கு மண்டல மண்டல துடுப்பாட்ட அணியும் இங்கு மோதின.[2]
அரங்கத் தகவல் | |||
---|---|---|---|
அமைவிடம் | அல்வார், ராஜஸ்தான் | ||
உருவாக்கம் | 1993 முதலாவது பதிவு செய்யப்பட்ட போட்டி | ||
இருக்கைகள் | 40,000 | ||
முடிவுகளின் பெயர்கள் | |||
இல்லை | |||
அணித் தகவல் | |||
| |||
10 ஆகத்து 2015 இல் உள்ள தரவு மூலம்: Ground profile |
2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 6,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இராணுவ ஆட்சேர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றபோது அரங்கத்திற்குள் நுழைந்தனர். நான்கு மணி நேரம் இக்கூட்டத்தால் அரங்கு நிரம்பியிருந்தது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Scorecard
- ↑ Scorecard
- ↑ Sharma, Rajendra (5 October 2012). "Mob at Army rally goes on the rampage in Alwar". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/jaipur/Mob-at-Army-rally-goes-on-the-rampage-in-Alwar/articleshow/16679500.cms. பார்த்த நாள்: 15 June 2018.