அல் சபித்

இந்திய நடிகர்

அல் சபித் (Al Sabith) ஓர் இந்திய குழந்தை நடிகராவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் நடிகராகவும் தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் இருக்கிறார்.[1] பிளவர்ஸ் தொலைக்காட்சியின் சிட்காம் நிறுவனத்தின் தயாரிப்பில் உப்பும் முழக்கும் என்ற படத்தில் 'கேசவ்' என்ற குழந்தை கதாபாத்திரமாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.[2]

அல் சபித்
பிறப்புகேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2013  – தற்போது வரை

தொழில்

தொகு

அல் சபித் முதன்முறையாக 2 வயதில் குழந்தையாக திரையில் தோன்றினார். இந்து பக்தி இசைத் தொகுப்பில் இவர் ஐயப்பன் வேடத்தில் நடித்தார்.[3] சில உண்மைநிலை நிகழ்ச்சி அரட்டை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இருந்த பிறகு, பிளவர்ஸ் தொலைக்காட்சியில் உப்பும் முழக்கும் என்ற நாடகத் தொடரில் 'கேசவ்' என்ற வேடத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.[4]

இவர், பல்வேறு தொலைக்காட்சி விருது நிகழ்ச்சிகளிலும், ஆசியநெட் பண்பலை வானொலி, கோல்ட் பண்பலை, ஆர்.கே திருமண மையம், பிளவர்ஸ் 94.7 பண்பலை, மேப்பிள் ட்யூன், பிளவர்ஸ் தொலைக்காட்சி போன்ற பல நிறுவனங்களுக்கான நிகழ்ச்சிகளிலும் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் தோன்றினார்.

உப்பும் முழக்கத்தின் வெற்றிக்குப் பிறகு, இவருக்கு திரைப்படத் துறையிலிருந்து ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. 2018 ஆம் ஆண்டில், சத்யன் அந்திக்காடின் 'நான் பிரகாசன்' படத்தில் பகத் பாசில் சிறீனிவாசன் ஆகியோருடன் நடித்தார்.[5]

இவர் ஜெயராம், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த மார்கோனி மத்தாய் என்ற படத்திலும் நடித்துள்ளார்.[6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. "This is the house where 'Uppum Mulakum' lad Kesu lives". OnManorama (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-06.
  2. "Uppum Mulakum completes 500 episodes - Times of India". timesofindia.com. பார்க்கப்பட்ட நாள் 19 March 2018.
  3. "Malayalam Child Artist Al Sabith". nettv4u (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-06.
  4. "Uppum Mulakum completes 500 episodes - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-06.
  5. "All you want to know about #AlSabith". FilmiBeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-06.
  6. "മലയാളത്തിലെ മികച്ച നടന്‍ 'ഉപ്പും മുളകിലെ' പയ്യന്‍, ഞെട്ടിച്ച് വിജയ് സേതുപതി". Express Kerala (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-04-18. பார்க்கப்பட்ட நாள் 2019-05-06.
  7. "Vijay Sethupathi is all praise for Uppum Mulakum fame Al Sabith, aka Keshu - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_சபித்&oldid=3505795" இலிருந்து மீள்விக்கப்பட்டது