அல் ஷமா பள்ளிவாசல், காசா
அல் ஷமா பள்ளிவாசல் (Al-Shamah Mosque) அல்லது பாபத் தாரும் பள்ளிவாசல் என்பது பலத்தீன் நாட்டின் காசா நகரில் ஹேய் அல் நஜரய்ன் பகுதியில் உள்ள பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசலில் மினார் இல்லை.[1]
அல் ஷமா பள்ளிவாசல் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ஹேய் அல் நஜரய்ன், ஜைய்தூன் சதுக்கம், காசா, பலத்தீன் நாடு |
சமயம் | இசுலாம் |
மாகாணம் | காசா |
மாவட்டம் | காசா |
செயற்பாட்டு நிலை | செயல்பாடில் உள்ளது |
வரலாறு
தொகுஇது மம்லுக் அரசின் காசா பகுதிக்கான ஆளுனர் சன்ஜார் அல் ஜாவ்லி என்பவரால் கி.பி.1315 மார்ச் 8 இல் கட்டப்பட்டது.[2][3]
பள்ளிவாசலில் உள்ள கல்வெட்டுக் குறிப்பின்படி இந்த பள்ளிவாசல் மாம்லுக் சுல்தான் அல்-நசீர் முகமதுவின் ஆட்சியில் காசா ஆளுநர் அல் ஜாவ்லியால் கட்டப்பட்டது. பின்பு 1799 இல் நெப்போலியன் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, அல்-ஷமா பள்ளிவாசல் பல தடவை மீட்டமைவுகள் மூலம் பழுது பார்க்கப்பட்டது.[4]
வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்புகள்
தொகு- கி.பி.1315 இல் இப்னு பதூதா எனும் வரலாற்று ஆய்வாளரின் கூற்று வருமாறு: "காசா நகரில் அழகான வெள்ளிக்கிழமை தொழுகைக்கான பள்ளிவாசல் அமீர் அல்-ஜாவ்லி அவர்களால் கட்டப்பட்டு இருந்தது. அது விமர்சையாக கட்டப்பட்ட, நேர்த்தியான கட்டிடம் ஆகும்.அதன் பிரசங்க பகுதியில் வெள்ளை பளிங்கு கற்கள் இருந்தது".
- 15 ஆம் நூற்றாண்டை சார்ந்த அல் சகாவி எனும் வரலாற்று ஆய்வாளரின் கூற்று வருமாறு: "கி.பி.1440 இல் அல் ஷாமா பள்ளிவாசலின் இமாமாக கதீப் யூசுப் அல் காஜி அவர்கள் இருந்தார்கள்".[5]
மேற்கோள்கள்
தொகுஆதார நூற்பட்டியல்
தொகு- Meyer, Martin Abraham (1907). History of the city of Gaza: from the earliest times to the present day. Columbia University Press.
- Sharon, Moshe (2009). Corpus Inscriptionum Arabicarum Palaestinae, G. Vol. 4. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-17085-5.