அளபெடைத் தொடை
செய்யுள்களில் அடிகளில் அளபெடை அமைய வருவது அளபெடைத் தொடை ஆகும். எழுத்துக்கள் தமக்குரிய மாத்திரைகளுக்கு அதிகமாக அளபெடுத்து (நீண்டு) ஒலிப்பது அளபெடை. நயம் கருதி இவை செய்யுள்களில் பயன்படுத்தப்படுகின்றன.[1] மோனை, எதுகை போன்ற பெரும்பாலான தொடைகளைப் போலவே அளபெடைத் தொடையும் செய்யுள் அடிகளின் முதற் சீரிலேயே அமைகின்றன.
- ஒஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
- தாஎம் இதற்பட் டது.
என்னும் குறளில் அளபெடைத்தொடை அமைந்துள்ளது காண்க. இங்கே அடிகளின் முதற் சீரின் முதல் எழுத்தே அளபெடுத்து அமைந்துள்ளது. எனினும் அச் சீரின் எவ்வெழுத்து அளபெடுத்து அமைந்தாலும் அது அளபெடைத் தொடையே ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தொடை விகற்பங்கள் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.