அளவறி ஆய்வு

இயற்கை அறிவியல்களிலும், சமூக அறிவியல்களிலும், அளவறி ஆய்வு (quantitative research) என்பது, புள்ளியியல், கணிதவியல், கணினி நுட்பங்கள் என்பவற்றினூடாக, கவனிக்கக்கூடிய தோற்றப்பாடுகள் தொடர்பான முறைப்படியான பட்டறிவுசார் ஆய்வு ஆகும்.[1] தோற்றப்பாடுகள் தொடர்பில் கணித மாதிரிகள், கோட்பாடுகள், எடுகோள்கள் ஆகியவற்றை உருவாக்கிப் பயன்படுத்துவதே அளவறி ஆய்வின் நோக்கமாகும். அளவிடல் வழிமுறையே அளவறி ஆய்வில் முக்கியமானது. ஏனெனில், பட்டறிவுசார் கவனிப்புக்கும், அளவுசார் தொடர்புகளின் கணித வெளிப்பாட்டுக்கும் இடையிலான அடிப்படை இணைப்பை அளவிடல் வழிமுறையே தருகிறது. அளவுசார் தரவுகள் என்பன புள்ளிவிபரங்கள், நூற்றுவீதங்கள் போன்று எண் வடிவில் அமைந்தவை.

மேற்கோள்கள் தொகு

  1. Given, Lisa M. (2008). The Sage encyclopedia of qualitative research methods. Los Angeles, Calif.: Sage Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4129-4163-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அளவறி_ஆய்வு&oldid=2749439" இலிருந்து மீள்விக்கப்பட்டது