அளவை விளக்கம்
அளவை விளக்கம் என்னும் நூல் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் களந்தை ஞானப்பிரகாசர் என்பவரால் இயற்றப்பட்டது. [1]
இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை.
நூலைப்பற்றிய குறிப்புகள்
தொகு- கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஆனது. [2]
- காண்டல் முதல் சம்பவம் இறுதியாக உள்ள 10 அளவைகளின் இலக்கணங்கள் இதில் கூறப்பட்டிருத்தல் வேண்டும். [3]
- இந்த நூலின் காலம் 15-ஆம் நூற்றாண்டு.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ களந்தை ஞானப்பிரகாசரின் மாணாக்கர் வெள்ளியம்பலவாணத் தம்பிரான் வழங்கிய ‘முத்தி நிச்சயம்’ என்னும் பேருரைப் பதிப்பு நூல் பக்கம் 253
- ↑ சிவஞான யோகிகள் அளவையின் சிறப்பைக் கூறும்போது இந்தநூலின் பாடல் ஒன்றை எடுத்துக்காட்டுகிறார்.
- ↑ உ. வே. சாமிநாதையர் நூல், ‘சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும்’