களந்தை ஞானப்பிரகாசர்
ஞானப்பிரகாசர் என்னும் பெயருடன் மெய்கண்டார் காலத்தில் பலர் வாழ்ந்தனர்.
களந்தை ஞானப்பிரகாசரைக் களந்தை ஞானப்பிரகாச பண்டாரம் (முனிவர்) எனவும் குறிப்பிடுவர்.
களந்தை என்பது திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள ஆதித்தேச்சுரம் கோயில் உள்ள ஊர். இந்த ஊரில் வாழ்ந்த இந்த ஞானப்பிரகாசர் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் ஆவார்.
- சந்தான அகவல் (சந்தான வரலாறு),
- தசகாரியம்,
- சகலாகம சாரம்,
- அளவை விளக்கம்
ஆகிய 4 நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005