சந்தான அகவல்

சந்தான அகவல் என்னும் நூல் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் களந்தை ஞானப்பிரகாசரால் 15 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல். மெய்கண்ட சித்தாந்த சாத்திரங்கள் வந்த வராற்றை இது தொகுத்துரைக்கிறது.

இவரது குரு (குரவர்) மறைஞானசம்பந்தர் வாய்மொழியாகக் கூறிய செய்தி என்று இவரது ஆசிரியப்பா ஒன்று 31 வரிகளைக் கொண்டுள்ளது. இது சந்தான அகவல் நூலின் இறுதிப் பகுதி என்கின்றனர்.

மேலும் 26 சைவ நூல்களையும், 4 கருவி நூல்களையும், 5 பிரபந்தங்களையும் தொகுத்துக் காட்டிய வெள்ளியம்பலவாணர் (கி.பி. 1700) “சந்தான வரலாற்றில் காண்க” என்று குறிப்பிடுவதிலிருந்தும் இந்த நூல் இருந்த செய்தி உறுதியாகிறது.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தான_அகவல்&oldid=1767269" இலிருந்து மீள்விக்கப்பட்டது