அளிப்பு விதி

சந்தையில், நுகர்வோருக்கு கிடைக்கக் கூடிய ஒரு பண்டம் அல்லது சேவையின் மொத்த அளவு அளிப்பு ஆகும். மற்ற காரணிகள் மாறிலியாக உள்ளபோது, ஒரு பண்டம் அல்லது சேவையின் விலை உயர்ந்தால் அளிப்பு உயரும். மாறாக விலை குறைந்தால் அளிப்பு குறையும். இது பொருளியலில் அளிப்பு விதி (law of supply) எனப்படும். விலைக்கும் அளிப்பிற்குமுள்ள நேரிடை தொடர்பினை இவ்விதி விளக்குகிறது

இதனை பின்கண்ட பட்டியல் விளக்குகிறது:

ஒரு பொருளின் விலை ரூபாயில் அளிப்பு (டஜனில்)
5 10
10 20
20 40
30 50

விலை ரூ 5 ஆக இருக்கும்பொழுது அளிப்பின் அளவு 1 டஜன்களாக உள்ளது விலை 10 ஆக உயரும்பொழுது அளிப்பின் அளவு 20டஜன்களாக உள்ளது இது விலை உயர உயர அளிப்பு உயருகிறது என்பதை காட்டுகிறது காரணம் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்ந்தால் இலாபம் அதிகரிக்கும் என்பதால் விலை ரூ30 இலிருந்து 20ஆக குறைந்தால் அளிப்பு 50லிருந்து 40 ஆக குறைகிறது இது விலை குறைய குறைய அளிப்பு குறைகிறது என்பதை காட்டுகிறது. காரணம் உறபத்தியாளர்கள் குறைந்த விலைக்கு பொருளை விற்கும்பொழுது நட்டம் ஏற்படும்

எனவே விலைக்கும் அளிப்பிற்கும் இடையேயுள்ள நேரிடை தொடர்பினை இவ்வ்விதி விளக்குகிறது..

இவற்றையும் பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அளிப்பு_விதி&oldid=2843949" இருந்து மீள்விக்கப்பட்டது