அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது

அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது என்பது தமிழ்நாட்டிலுள்ள திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென நிறுவிய பணிப்புலமான தமிழ்ப்பேராயம் என்பதன் வழியாக அளிக்கப்படும் தமிழ்ப் பேராய விருதுகளில் ஒன்றாகும். கதை, கவிதை, நாடகம் போன்ற குழந்தை இலக்கியப் படைப்புகளை உள்ளடக்கமாகக் கொண்டு வெளியான சிறந்த நூல்களில் ஒன்றைத் தேர்வு செய்து, அந்நூலின் நூலாசிரியர் விருதுக்குரியவராகத் தேர்வு செய்யப்படுவார். இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவருக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 1,50,000 பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படுகின்றன.

விருது பெற்ற நூல்கள் தொகு

ஆண்டு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு குறிப்புகள்
2012 --- --- --- தேர்வு செய்யப்படவில்லை
2013 1. அமேசான் காடுகளும் சகாரா பாலைவனமும் எப்படித் தோன்றின?
2. குட்டி யானையும் சுட்டிகளும்
3. உங்கள் சுட்டிக் குழந்தைகளுக்குச் சுவையான குட்டிக் கதைகள் -75
1. பெ. கருணாகரன்
2. கொ. மா. கோதண்டம்
3. கமலா கந்தசாமி
பரிசுத் தொகை ரூபாய் 1, 50,000 மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.