அவுட்ராம் பேங்சு

அவுட்ராம் பேங்சு (ஜனவரி 12, 1863 - செப்டம்பர் 22, 1932) என்பவர் அமெரிக்க விலங்கியல் நிபுணர் ஆவார் .

இளமை & கல்வி

தொகு

பேங்ஸ் வாட்டர்டவுன், மாசசூசெட்ஸில் எட்வர்ட் மற்றும் அன்னி அவுட்ராம் (ஹாட்கின்சன்) பேங்சின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் 1884 -1880 காலத்தில் கல்வி பயின்றார். ஆர்வர்டு ஒப்பீட்டு விலங்கியல் அருங்காட்சியக பாலூட்டிகளின் காப்பாளராகவும் 1900 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.

பணிகள்

தொகு

பேங்சு 1906-ல் ஜமைக்காவிற்குச் சென்று அங்கு 100க்கும் மேற்பட்ட பறவைகளின் மாதிரிகளைச் சேகரித்தார். ஆனால் இவரது பயணம் டெங்கு காய்ச்சலால் தடைப்பட்டது. 1899ஆம் ஆண்டு ஆர்வர்டு கல்லூரிக்கு 10000க்கும் மேற்பட்ட பாலூட்டிகளின் தோல்கள் மற்றும் மண்டை ஓடுகளின் தொகுப்பினை வழங்கினார். இதில் 100 வகையான மாதிரி சிற்றினங்கள் இருந்தன. 1908ஆம் ஆண்டில் இவரது 24,000 பறவை தோல்கள் ஒப்பீட்டு விலங்கியல் அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் இவர் இதை அதிகரிக்கச் செய்தார். 1925இல் இவர் ஐரோப்பாவிற்குச் சென்றார். அருங்காட்சியகங்களைப் பார்வையிட்டு பறவையியல் வல்லுநர்களுடன் உரையாடி அறிவியல் பரிமாற்றங்களுக்கு ஏற்பாடு செய்தார். இவர் 70க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவற்றில் 55 பாலூட்டிகள் குறித்தது.

இறப்பு

தொகு

பேங்சு, மாசசூசெட்சின் வேர்ஹாமில் உள்ள தனது கோடைக்கால இல்லத்தில் 1932ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்தார்.

ஆய்வு வெளியீடுகள்

தொகு

தொடர்புடைய பெயர்ச்சொற்கள்

தொகு
  • பாங்சியாதாங்கர் பேரினம் [1]
  • கிரேலாரியா பாங்சி – சாண்டா மார்டா குருவி [1]
  • சைந்தியோசையூரசு புரோச்சசு – பேங்சு மலை அணில்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2014). The Eponym Dictionary of Birds. Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781472905741.

வெளி இணைப்புகள்

தொகு
  • Works by Outram Bangs at Project Gutenberg
  • Works by or about Outram Bangs at Internet Archive
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவுட்ராம்_பேங்சு&oldid=3743528" இலிருந்து மீள்விக்கப்பட்டது