அவேலி மாவட்டம்
ஹவேலி மாவட்டம் (Haveli District), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஆசாத் காஷ்மீர் பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]
ஹவேலி
{ضلع حویلی | |
---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தான் நாட்டின் ஆசாத் காஷ்மீரில் ஹவேலி மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்) | |
நாடு | பாகிஸ்தான் |
பிரதேசம் | ஆசாத் காஷ்மீர் |
வருவாய் கோட்டம் | பூஞ்ச் |
தலைமையிடம் | போர்வார்டு காகுத்தா |
அரசு | |
• வகை | District Administration |
பரப்பளவு | |
• மொத்தம் | 598 km2 (231 sq mi) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 1,52,124 |
• அடர்த்தி | 268/km2 (690/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | உருது |
• பேச்சு மொழிகள் | பகாரி மொழி, கோஜ்ரி மொழி, காஷ்மீரி மொழி |
தாலுகாக்கள் | 3 |
2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 598 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஹவேலி மாவட்ட மக்கள் தொகை 1,52,124 ஆகும்.[2] இம்மாவட்டத்தில் பேசப்படும் முக்கிய மொழிகள் பகாரி மொழி (65%), குஜாரி மொழி (30%) மற்றும் காஷ்மீரி மொழி (5%) ஆகும்.[3][4]
மாவட்ட நிர்வாகம்
தொகுஅவேலி மாவட்டம் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டது. அவைகள்:
- அவேலி வட்டம்
- குர்சிதாபாத் வட்டம்
- மும்தாஜாபாத் வட்டம்
இம்மாவட்டம் 12 ஒன்றியக் குழுக்களையும், 95 கிராமங்களையும் மற்றும் போர்வார்டு ககுத்தா எனும் நகராட்சியையும் கொண்டது.
புவியியல்
தொகுபீர் பாஞ்சால் மலைத்தொடரில் 8000 அடி உயரத்தில் ஹவேலி மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மிக உயரமான பெதோரி மலைச்சிகரம் 12,228 அடி உயரத்தில் உள்ளது.[5]இதன் வடக்கிலும், வடகிழக்கிலும் இந்தியாவின் பாரமுல்லா மாவட்டம், தெற்கில் பூஞ்ச் மாவட்டமும், மேற்கில் பாக் மாவட்டம் மற்றும் பூஞ்ச் மாவட்டம், பாகிஸ்தான் எல்லைகளாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "District Haveli (Kahutta)". Government of Azad Jammu & Kashmir. Archived from the original on 8 April 2014. பார்க்கப்பட்ட நாள் 6 July 2013.
- ↑ "Census 2017: AJK population rises to over 4m" (in en-US). The Nation. http://nation.com.pk/national/27-Aug-2017/census-2017-ajk-population-rises-to-over-4m.
- ↑ Statistical Year Book 2020 (PDF). Muzaffarabad: AJ&K Bureau Of Statistics. p. 140. பார்க்கப்பட்ட நாள் 3 March 2022.
- ↑ Shakil, Mohsin (2012). "Languages of Erstwhile State of Jammu Kashmir (A Preliminary Study)". p. 12.
- ↑ "Bedori Top Mountain Information".