அவ்தார் சிங் சீமா
அவ்தார் சிங் சீமா (Avtar Singh Cheema) எவரெசுட்டு சிகரத்தை ஏறிய முதல் இந்திய மனிதராகவும் உலகின் பதினாறாவது நபராகவும் அறியப்படுகிறார்.[1] 1933 முதல் 1989 ஆம் வரையிலான காலத்தில் இவர் வாழ்ந்தார். இரண்டு தோல்விகளுக்குப் பின்னர் மேலும் 8 பேருடன் இவர் எவரெசுட்டு சிகரத்தை ஏறும் 1965 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது பயணத்திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தார். இந்திய எவரெசுட்டு பயணக்குழுவினர் 1965 ஆம் ஆண்டு மே 20 அன்று 9 மலையேறுபவர்களை எவரெசுட்டின் உச்சியில் நிறுத்தியது. இச்சாதனை 17 ஆண்டுகள் நீடித்தது. எம் எசு. கோக்லி இக்குழுவின் தலைமை பொறுப்பில் இருந்தார். நவங் கோம்பு, சோனம் கியாட்சோ,சோனம் வாங்கியால் , சந்திர பிரகாசு வோரா , ஆங் காமி, எச்.பி.எசு.அலுவாலியா, அரீசு சந்திர சிங் ராவத்து மற்றும் பு தோர்யி ஆகியோர் சீமாவுடன் மலையேற்ற குழுவில் இடம்பெற்றிருந்தனர்.[2][3][4][5][6][7] அப்போது சீமா 7 ஆவது பிஎன் வான்குடை இராணுவப் படையின் தலைவராக இருந்தார். பின்னர் இவர் கர்னலாக பதவி உயர்வு பெற்றார்.[8] அவ்தார் சிங் சீமாவின் சாதனைகளுக்காக 1965 ஆம் ஆண்டில் அருச்சுனா விருதும் [9] பத்மசிறீ விருதும் [10] வழங்கப்பட்டன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Autar Singh Cheema -". www.everesthistory.com.
- ↑ "First successful Indian Expedition of 1965-". www.istampgallery.com.
- ↑ "First successful Indian Expedition of 1965-". www.thebetterindia.com.
- ↑ "First successful Indian Expedition of 1965-". www.youtube.com.
- ↑ Kohli, M. S. (December 2000). Nine Atop Everest-First successful Indian Expedition of 1965-. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173871115.
{{cite book}}
:|website=
ignored (help) - ↑ "The first Indians on Everest-First successful Indian Expedition of 1965-". www.livemint.com.
- ↑ "The first Indians on Everest-First successful Indian Expedition of 1965-". www.himalayanclub.org.
- ↑ "EverestHistory.com: A. S. Cheema". Archived from the original on 2009-10-14. பார்க்கப்பட்ட நாள் 2010-02-13.
- ↑ "Arjuna Award for The first Indians on Everest on 1965-". www.sportsauthorityofindia.nic.in. Archived from the original on 2019-08-08. பார்க்கப்பட்ட நாள் 2020-11-29.
- ↑ "Padma Shree for The first Indians on Everest on 1965-". www.dashboard-padmaawards.gov.in. Archived from the original on 2020-10-21. பார்க்கப்பட்ட நாள் 2020-11-29.