எச். பி. எஸ். அலுவாலியா

இராணுவத் தளபதி அரி பால் சிங் அலுவாலியா (Hari Pal Singh Ahluwalia) (பிறப்பு: 1936 நவம்பர் 6) ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரியுமான இவர் ஓர் இந்திய மலையேறுபவரும், எழுத்தாளரும், சமூக சேவகரும் ஆவார். தனது தொழில் வாழ்க்கையில் சாகசங்கள், விளையாட்டு, சுற்றுச்சூழல், மாற்றுத் திறன், சமூக பணி போன்ற துறைகளில் பங்களிப்பு செய்துள்ளார். [2] எவரெசெட்டு சிகரத்தை ஏறிய ஆறாவது இந்தியராகவும், உலகின் இருபத்து ஓராவது மனிதராகவும் இருக்கிறார். பன்னிரன்டு ஆண்டுகள் முயற்சி செய்து மே 29 அன்று, எவரெசுட்டு சிகரத்தை எச். சி. எசு. இராவத்துடன், பூ டோர்சி செர்பா உதவியுடன் சிகரத்தை அடைந்தார். எவரெஸ்ட்டின் உச்சியில் மூன்று மலையேறுபவர்கள் ஒன்றாக நின்றது இதுவே முதல் முறையாகும்.

இராணுவத் தளபதி
எச். பி. எசு. அலுவாலியா
பிறப்பு6 நவம்பர் 1936 (1936-11-06) (அகவை 88)
சியால்கோட், பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய பஞ்சாப், பாக்கித்தான்)
படித்த கல்வி நிறுவனங்கள்புனித சார்ச்சு கல்லூரி, முசௌரி, இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
1995
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
இந்திய முதுகெலும்பு காயங்கள் மையத்தின் தலைவர்
பெற்றோர்தந்தை- திரு சர்சித் சிங்
தாயார்- திருமதி அர்பன்சு கௌர்
வாழ்க்கைத்
துணை
போலி அலுவாலியா
பிள்ளைகள்1
விருதுகள்பத்ம பூசண்
பத்மசிறீ
அருச்சுனா விருது
இராணுவப் பணி
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1958-1968
தரம்இராணுவத் தளபதி
தொடரிலக்கம்IC-11112[1]
போர்கள்/யுத்தங்கள்இந்தியா-பாகிஸ்தான் போர், 1965

டார்சீலிங்கின் இமயமலை மலையேறும் நிறுவனத்தில் தனது மேம்பட்ட பயிற்சியைத் தொடர்ந்து, இவர் நேபாளம், சிக்கிம் ஆகிய இடங்களில் பயிற்சியை மேற்கொண்டார். பின்னர் இவர் 1965 மே 29 அன்று எவரெசுட்டு சிகரத்தில் ஏறினார். 1965 ஆம் ஆண்டு இந்திய இராணுவப் பயணம் எவரெசுட்டுக்கான முதல் வெற்றிகரமான இந்தியப் பயணம் ஆகும். இது 9 மலையேறுபவர்களை முதலிடத்தில் வைத்தது. இது கேப்டன் எம்.எசு. கோக்லி தலைமையிலான 17 ஆண்டுகால சாதனையாகும். இவருடன் அவ்தார் சிங் சீமா, நவாங் கோம்பு செர்பா, சோனம் கியாத்சோ, சோனம் வாங்கல், சி.பி. வோக்ரா, ஆங் காமி செர்பா, அரிசு சந்திரா சிங் ராவத், பூ டோர்சி செர்பா ஆகியோர் 1965 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக உச்சத்தை எட்டினர். மேலும் எவரெசெட்டு சிகரத்தை ஏறிய முதல் இந்தியர்கள் என்ற பெருமையை பெற்றனர். [3] [4] [5] [6] [7] [8] 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாக்கித்தான் போரின்போது, இவரது முதுகெலும்பில் குண்டு காயம் ஏற்பட்டது. இதன் விளைவாக இவர் சக்கர நாற்காலியில் அடைக்கப்பட்டார். தற்போது, இவர் இந்திய முதுகெலும்பு காயங்கள் மையத்தின் தலைவராக உள்ளார். பதின்மூன்று புத்தகங்களை எழுதியுள்ள இவர், விருது பெற்ற பியாண்ட் இமாலயா என்ற தொடரையும் தயாரித்துள்ளார். இது டிசுகவரி தொலைக்காட்சியிலும்,இந்தியாவின் நேசனல் சியாகிரபிக் தொலைக்காட்சியிலும் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.  

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

அலுவாலியா 1936 6 நவம்பர் அன்று பிறந்தார். மேலும் இவரது இரண்டு சகோதரிகளுடனும், இரண்டு தம்பிகளுடனும் சிம்லாவில் வளர்ந்தார். இவரது தந்தை இந்திய மத்தியப் பொதுப்பணித் துறையில் பொறியாளராகப் பணிபுரிந்தார்.

தனது கல்வி வாழ்க்கைக்காக தேராதூனிலுள்ள புனித சோசப் அகாதமிக்கும், முசோரியின் புனித சார்ச்சு கல்லூரிக்கும் சென்றார். அங்கு, புகைப்படம் எடுத்தலிலும், மலையேற்றத்திலும் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். பட்டப்படிப்புடன், மலையேறும் ஆர்வமும் அதிகரித்தது. கர்வால், சிக்கிம், நேபாளம், லடாக் எவரெசெட்டு சிகரம் ஆகிய இடங்களில் இவரது மலையேற்றம் இருந்தது.

இராணுவ வாழ்க்கை

தொகு

பட்டம் பெற்ற பிறகு இவர் இந்திய ராணுவத்தில் ஒரு அதிகாரியாக சேர்ந்தார். 1958 திசம்பர் 14 அன்று இராணுவ மின்-இயந்திர பொறியியல் கிளையில் இரண்டாவது லெப்டினெண்டாக ஒரு பதவியைப் பெற்றார். [1] இவர் 1960 திசம்பர் 14 அன்று லெப்டினெண்டாகவும், 1964 திசம்பர் 14 இல் தளபதியாகவும் பதவி உயர்வு பெற்றார். [9] 1965 ஆம் ஆண்டு பாக்கித்தானுடனான போரின் போது, இவரது முதுகெலும்பில் ஒரு தோட்டாவால் காயமடைந்தார். இது இவரை சக்கர நாற்காலியில் அடைத்து வைத்தது. இவர் 1968 சனவரி 8இல் இராணுவத்திலிருந்து கௌரவத்துடன் வெளியேறினார். [10] [11]

விருதுகள்

தொகு
  • அருச்சுனா விருது -1965 [12]
  • பத்மசிறீ -1965 [13] [14]
  • பத்ம பூசண் -2002 [15]
  • வாழ்நாள் சாதனையாளருக்கான டென்சிங் நோர்கே தேசிய சாதனை விருது - 2009 ஆகத்து 29
  • மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கான தேசிய விருது - 1998 திசம்பர் 3
  • கல்சாவின் ஆணை (நிசான்-இ-கல்சா) கல்சாவின் பிறப்பின் நூற்றாண்டு

புகைப்படக் காட்சிகள்

தொகு

நூலியல்

தொகு
  • Higher than Everest
  • The Summit Within
  • Eternal Himalaya
  • Beyond the Himalayas
  • Everest- Where the Snow never melts
  • Hermit Kingdom Ladakh
  • Ladakh Nubra The Forbidden Valley
  • Tracing Marco Polo's Journey

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 12 September 1959. p. 226. 
  2. "H.P.S. Ahluwalia -". www.everesthistory.com.
  3. "First successful Indian Expedition of 1965-". www.istampgallery.com.
  4. "First successful Indian Expedition of 1965-". www.thebetterindia.com.
  5. "First successful Indian Expedition of 1965-". www.youtube.com.
  6. "Nine Atop Everest-First successful Indian Expedition of 1965-". books.google.com.sa.
  7. "The first Indians on Everest-First successful Indian Expedition of 1965-". www.livemint.com.
  8. "The first Indians on Everest-First successful Indian Expedition of 1965-". www.himalayanclub.org.
  9. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 21 January 1961. p. 20. 
  10. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 3 March 1973. p. 295. 
  11. "Part II-Section 3". The Gazette of India. 15 September 1997. p. 5. 
  12. "Arjuna Award for The first Indians on Everest on 1965-". www.sportsauthorityofindia.nic.in. Archived from the original on 2019-08-08. பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
  13. "Padma Shree for The first Indians on Everest on 1965-". www.dashboard-padmaawards.gov.in. Archived from the original on 2020-10-21. பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
  14. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  15. "Everest conqueror cautions against perils of professional climbing". The Tribune. 13 April 2011. பார்க்கப்பட்ட நாள் 16 September 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._பி._எஸ்._அலுவாலியா&oldid=3545564" இலிருந்து மீள்விக்கப்பட்டது