அவ்னிதா பிர்

இந்தியக் கல்வியாளர்

அவ்னிதா பிர் ( Avnita Bir ) ஓர் இந்தியக் கல்வியாளரும் மற்றும் பொருளாதார நிபுணரும் ஆவார். இவர் மகாராட்டிர மாநிலம் மும்பையிலுள்ள உள்ள ஆர்.என். போடார் பள்ளியின் [1] முதல்வராகவும் இருக்கிறார். இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியக் கல்வி அமைப்பில் பணிபுரிந்தார். மேலும் இவர் லேர்ன் சிப்ட் இன்டியா 2012 என்ற அமைப்பின் சார்பில், [2] இந்தியக் கல்வியை மாற்றியமைப்பது குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு தில்லியில் நடந்த மாநாட்டில் கண்காணிப்பாளராக இருந்தார். இவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில், மறைந்த பிரதமர் இராஜீவ் காந்தியின் குழந்தைகளுக்கு ( இராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ) பொருளாதாரத்தில் சிறப்புப் பாடம் கற்பிக்க நியமிக்கப்பட்டார். [3]

அவ்னிதா பிர்
2012 இல் ஒரு நிகழ்ச்சியில் அவ்னிதா பிர்
பிறப்பு31 அக்டோபர் 1957 (1957-10-31) (அகவை 67)
அமிருதசரசு, பஞ்சாப், India
படித்த கல்வி நிறுவனங்கள்சீமாட்டி சிறீ ராம் கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம்
பொருளாதாரத்திற்கான பள்ளி, புது தில்லி
பணிஆர். என். போடார் பள்ளியின் முதல்வர்
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
விருதுகள்ஆசிரியர்களுக்கான தேசிய விருது (2009) கோ பூன் வீ அறிஞர்களுக்கான விருது (2013)

கல்வி

தொகு

அவ்னிதா சிங் பர்மர், இந்தியாவின் பஞ்சாப், அமிர்தசரசில் 31 அக்டோபர் 1957 அன்று ஒரு பஞ்சாபி இந்து கத்ரி குடும்பத்தில் பிறந்தார். தில்லி பல்கலைக்கழகத்திலுள்ள சீமாட்டி சிறீ ராம் கல்லூரியில் பட்டம் பெற்றார். பொருளாதாரத்தில் முதுகலை கல்வியைப் பெறுவதற்காக தில்லி பொருளாதாரப் பள்ளிக்குச் சென்றார். பொருளாதாரப் பேராசிரியருக்கான பல்கலைக்கழக மானியக் குழு தேர்விலும் தேர்ச்சி பெற்றார். [4] பொருளாதாரத்திற்கான ஆர்வர்டு பள்ளி மற்றும் அகமதாபாத்தின் இந்திய மேலாண்மை கழகம் உள்ளிட்ட இடங்களில் கற்பித்தல் மற்றும் கற்றல் தொடர்பான பல மாநாடுகள் மற்றும் பட்டறைகளிலும் இவர் பங்கேற்றார். [4]

தொழில்

தொகு

மல்லையா அதிதி சர்வதேசப் பள்ளி, [5] [6] ஐதராபாத் பொதுப் பள்ளி [7] மற்றும் பல துறைகளின் தலைவராகவும், ஒரு ஒருங்கிணைப்பாளராகவும், ஆர்.என். போடார் பள்ளியின் முதல்வராக சேருவதற்கு முன்பு, இந்தியாவின் கல்வி நிறுவனங்களுடன் இவர் பணியாற்றியுள்ளார்.

அங்கீகாரம்

தொகு

எசுப்பானியாவின்வின் கல்வித் தர அறக்கட்டளையின் சிறந்த கல்விக்கான விருதுகள் 2008 மற்றும் 2011 இல் ஐசிஎஸ் வழங்கிய கல்வித் தலைமைத்துவ விருது உள்ளிட்ட விருதுகளை பிர் வென்றுள்ளார். கபில் சிபலின் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தக் குழுவில் உறுப்பினராக இருந்த இவர், பின்னர், இந்தியாவின் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் இந்தியாவின் ஆளும் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மேலும், செய்தித்தாள்கள், [8] இதழ்கள் [9] [10] மற்றும் என்டிடிவி [11] [12] போன்ற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்ட இதல்களில் கல்வி மற்றும் மாணவர்கள் தொடர்பான பிற பிரச்சினைகளில் கவனம் செலுத்தினார். இவர் வழங்கிய உத்வேகமான வழிகாட்டுதலுக்காக இவர் கோன் பூன் வீ அறிஞர் விருதுக்கு எசுப்பானியாவின் பார்செலோனாவில் நடைபெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வழிகாட்டி பள்ளி திட்டத்திற்காக தேர்ந்தெடுத்த 80 கல்வியாளர்களில் இவரும் ஒருவர். [13] கல்வித் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக 2014 ஆம் ஆண்டில் சிறந்த பெண் சாதனையாளர் விருது இவருக்கு வழங்ககப்பட்டது. [14] இவர் நவம்பர் 2014, கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் ஏற்பாடு செய்யப்பட்ட கூகுள் கல்வி கருத்தரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தொகுப்பாளராகவும், இணை குழு உறுப்பினராகவும் இருந்தார் [15]

2016 ஆம் ஆண்டில், தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறைகளில் இவர் ஆற்றிய முக்கிய பங்கை ஒப்புக்கொண்டு, கூகுளின் குளோபல் கல்வி ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். [16] இது கல்வியை மாற்றியமைப்பதற்காக பல்வேறு தலைவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்டுவருவதற்கான உலகளாவிய முயற்சியாகும். 2023 ஆம் ஆண்டில், மகரிஷி பதஞ்சலி வித்யா மந்திரால் அவருக்கு லோகமணி லால் வாழ்நாள் சிறப்பு விருது வழங்கப்பட்டது, இது நாடு முழுவதும் உள்ள விதிவிலக்கான ஆசிரியர்களை அங்கீகரித்து கவுரவிப்பதற்கான விருதாகும்.. [17]

பொருளாதாரம் பற்றிய இரண்டு புத்தகங்களை இவர் இணைந்து எழுதியுள்ளார். [18] [19]

மேற்கோள்கள்

தொகு
  1. "Avnita Bir: Visionary Principal". Archived from the original on 19 November 2015. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
  2. "LSI". Archived from the original on 2013-11-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-09.
  3. "DNA: Two months with Gandhi siblings". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
  4. 4.0 4.1 "India's Learning Agenda | Who is defining this?". archive.constantcontact.com. Archived from the original on January 16, 2022.
  5. "Avnita Bir: Visionary Principal". Archived from the original on 19 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.. Archived from the original பரணிடப்பட்டது 2015-11-19 at the வந்தவழி இயந்திரம் on 19 November 2015. Retrieved 12 March 2013.
  6. "School Profile – Mallya Aditi International School". Archived from the original on 2022-01-16. பார்க்கப்பட்ட நாள் 2019-03-09.
  7. "BEGUMPET". 2019-01-28. பார்க்கப்பட்ட நாள் 2019-03-09.
  8. Pednekar, Puja. "Mumbai students to study math, English on playground".
  9. "Avnita Bir: Visionary Principal"."Avnita Bir: Visionary Principal". Archived from the original on 19 November 2015. Retrieved 12 March 2013.
  10. "Mentor Magazine Cover story: Swallowing Discomfort, Spilling Out Guts".
  11. "NDTV video | Anti-rape laws: Age of consent to be lowered".
  12. "NDTV video | Education: Mini-revolution?".
  13. "Microsoft Educator Network | Global Forum 2014: Meet the Microsoft Mentor Schools | India". Archived from the original on 2014-05-30. பார்க்கப்பட்ட நாள் 2024-02-01.
  14. "Women achievers talk of Grit, Empowerment, Passion and Commitment | Jaipur Patrika". Archived from the original on 2014-05-17. பார்க்கப்பட்ட நாள் 2024-02-01.
  15. "Gafe Summit | All Presenters: Avnita Bir". Archived from the original on 2014-10-04. பார்க்கப்பட்ட நாள் 2024-02-01.
  16. "Film: Education builds a better world". Archived from the original on 2015-11-19. பார்க்கப்பட்ட நாள் 2015-11-18.
  17. https://timesofindia.indiatimes.com/city/allahabad/teachers-honoured-in-sangam-city/articleshow/106056405.cms
  18. Introduction to Economic Theory. Sterling. பார்க்கப்பட்ட நாள் 2019-03-09.
  19. National income accounting. South Asia Books.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவ்னிதா_பிர்&oldid=4108479" இலிருந்து மீள்விக்கப்பட்டது