அஷ்டவக்கிரன்

இந்திய எழுத்தாளர்
(அஷ்ட வக்கிரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அஷ்டவக்கரன் (சமக்கிருதம்: अष्टावक्रः, IAST Aṣṭāvakra) என்பவர் இந்து சமயப் புராணங்களில் குறிப்பிடப்படும் துறவியாவார். இவரை அஷ்டாவக்கிரர் என்றும் அழைக்கின்றனர். அஷ்ட + வக்கிரன் - அஷ்டம் என்றால் எட்டு என்றும் வக்கிரன் என்றால் கோணல் என்றும் பொருளாகும். இவர் பிறக்கும் போதே உடலில் எட்டு இடங்களில் கோணலுடன் பிறந்துள்ளரார். இவருடைய உடலில் இரு பாதங்கள், இரு கால் மூட்டுகள், இரு கை மூட்டுகள், மார்பு மற்றும் தலை ஆகியவற்றில் கோணல்கள் காணப்பட்டன. அஷ்டாவக்கிர ரிசி, அஷ்டாவக்கிர முனிவர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். பார்வைக்கு அகோரமாக இருந்தாலும், அறிவு நிறைந்தவர் என்றும், உடல்தோற்றத்தினை வைத்து மனிதருடைய அறிவினை அளவிடுதல் கூடாது என்பதாக இவருடைய வாழ்க்கையை வைத்து இந்து மதத்தில் போதிக்கப்படுகிறது.

அஷ்டவக்ரன்
உடல் எட்டு கோணலாக பிறந்தாலும், அறம் கற்று பண்டிதனான அஷ்டவக்ர முனிவர்.
குருஉத்தாலக ஆருணி
குறிப்பிடத்தக்க சீடர்(கள்)ஜனகர், யாக்யவல்க்கியர்
அஷ்டவக்ரனிடம் வாதாடும் ஜனகர்

அஷ்டவக்கிரர் ஜனக மகாராஜருக்கும், யாக்ஞவல்க்கியருக்கும் ஆகியோருக்கு குருவாக இருந்துள்ளார். அஷ்டவக்கிரரின் தாய்மாமன் சுவேதகேது ஆவார்.

உத்தாலக ஆருணி என்ற குருவின் சீடர் கஜோளகர். குறைவாகப் படித்திருந்தாலும் உண்மையானவர். அதனால் உத்தாலகர் தன் மகளை சீடரான கஜோளகருக்குத் திருமணம் செய்வித்தார். இத்தம்பதியரின் குழந்தை கருவிலிருக்கும் போது, கஜோளகர் தப்பும் தவறுமாக மந்திரம் சொல்வதைப் பொறுக்கமுடியாமல் கருவிலேயே, எட்டு கோணல் அடைந்தது. உடல் எட்டுக் கோணலுடன் பிறந்ததால், அக்குழந்தைக்கு அஷ்டவக்கிரன் எனப்பெயராயிற்று. அஷ்டவக்கிரனின் தந்தையான கஜோளகர், ஜனகரின் ஆஸ்தான புலவரான வந்தியிடம் தோற்று கடலில் மூழ்கடிக்கப்பட்டார். பின் அஷ்டாவக்கிரன் வளர்ந்து பண்டிதனாகி, வந்தியை ஜனகர் சபையில் வாதப்போரில் வென்றார்.[1][2]

நூல்கள்

தொகு

அஷ்டவக்கிர சம்ஹிதை

மேற்கோள்கள்

தொகு
  1. அஷ்டவக்கிரன்
  2. "Ashtavakra-and-Janaka". Archived from the original on 2016-06-02. பார்க்கப்பட்ட நாள் 2016-06-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஷ்டவக்கிரன்&oldid=4056418" இலிருந்து மீள்விக்கப்பட்டது