சனகர்

(சனகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சனகர் (Janaka) என்பவர் மிதிலாபுரி என்கிற நாட்டின் அரசனாவார். இவர் மனைவியின் பெயர் சுனைனா. இராமாயணக் கதையின்படி இவர் சனகபுரியை ஆண்டு வந்த இராசரிசி ஆவார். இவர் இராமாயணக் காவிய நாயகி சீதையின் வளர்ப்புத் தந்தை ஆவார். அத்துடன் இலட்சுமணனின் மனைவியான ஊர்மிளாவின் தந்தையும் இவரே. சனகரின் மகள் என்பதாலேயே சீதைக்கு ஜானகி என்ற பெயர் கிடைத்தது. சனகர் எனும் சொல்லுக்கு தந்தை என்று பொருள்.[1]

சனகர்
இராமர் மற்றும் தசரதனை மிதிலைக்கு வரவேற்கும் சனகர்
பெற்றோர்கள்ஹரஸ்வரோமன் (தந்தை), கைகேசி (தாய்)
சகோதரன்/சகோதரிகுசத்துவஜன்
குழந்தைகள்சீதை, ஊர்மிளா (மகள்கள்)
நூல்கள்இராமாயணம், உபநிடதங்கள்
சமயம்மிதிலா புரி
சிவ வில்லை உடைக்கும் இராமரை காணும் ஜனகர்
ஜனகருக்கு யாக்யவல்க்கியர் பிரம்ம ஞானத்தை உபதேசித்தல்

சிவதனுசின் கதை

தொகு

தட்ச பிரகஸ்பதியின் யாகத்தில் தன்னை மாய்த்துக்கொண்டாள் சதி தேவி். அதனால் கோபமுற்ற சிவபெருமான் தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட அத்தனை தேவர்களையும், அழிப்பதற்காக சிவதனுசினை எடுத்து அம்பினை பூட்டினார். அதற்குள் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் தங்களைக் காக்க வேண்டினர். அதனால் சிவபெருமான் மனம் மாறி, சிவதனுசினை தேவர்களின் மூத்தவரான தேவராதன் என்பவருக்கு அளித்தார்.

அந்த சிவதனுசை தேவராதம் வம்சத்தில் பாதுகாத்துவந்தார்கள். தேவராதம் மறையும் போது, அவர் சந்ததிகள் அதனை பாதுகாத்துவந்தார்கள். சிவதனுசின் மேன்மை புரிந்தவர்கள் வம்சத்தில் ஜனகர் தோன்றியதால், அவருக்கு சிவதனுசு கிடைத்தது.

சனகர் மகா யாகம் செய்த சமயம் வருணன் ஜனகரின் யாகத்தைப் போற்றி ருத்திர வில் (சிவ தனுசு) மற்றும் இரண்டு அம்புறாத் தூணிகளையும் சினகருக்குத் தந்திருந்தான். [2]

சுயம்வரம்

தொகு

சீதை திருமண வயதை எட்டியதும், தான் வைத்திருந்த சிவதனுசு என்னும் வில்லை வளைப்பவருக்கு சீதையை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார்.[3] சீதைக்கு சுயம்வரம் மிதுலை நாட்டில் பெரும் விழாவாக நடைபெற்றது. அப்போது விஸ்வாமித்திர முனிவருடன் இராமனும், இலக்குவனும் அங்கு வந்தார்கள். சிவதனுசை நாண்பூட்டி உடைத்தார் இராமர். அதனால் சீதையை இராமருக்கு திருமணம் செய்துதந்தார் சனகர்.

பிரகதாரண்யக உபநிடதம்

தொகு

இராசரிசி சனகர், அரசவையில் கூடியிருந்த முனிவர்களிடம், பிரம்மக்ஞானத்தை சரியாக விளக்குபவருக்கு ஆயிரம் பசுக்களை தானமாக தருகிறேன் என்றார். ஆனால் ஒரு முனிவரும் பிரம்ம வித்தை என்ற பிரம்ம ஞானத்தை விளக்க முன் வராத நிலையில், மகரிசி யாக்யவல்கியர் பிரம்ம ஞானத்தை சனகர் உள்ளிட்ட முனிவர்களுக்கு எடுத்துக் கூறினார். இந்த நிகழ்வு பிரகதாரண்யக உபநிடதத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.[4]

காண்க

தொகு

http://valmikiramayanam.in/

மேற்கோள்கள்

தொகு
  1. எழுந்திரு! விழித்திரு! ; பகுதி 7; பக்கம் 75
  2. இராமாயணம்; சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியர்; பக்கம் 44
  3. http://valmikiramayanam.in/?tag=seetha-kalyanam
  4. http://www.free-meditation.ca/archives/12537 Raja Janaka, King or Guru]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனகர்&oldid=3852352" இலிருந்து மீள்விக்கப்பட்டது