அஸ்டாரர் (Azdarar ( ஆர்மீனியம்: Ազդարար ) ( மேற்கு ஆர்மீனிய மொழியில் அஸ்டாரர் என உச்சரிக்கப்படுகிறது) என்பது முதல் அருமேனிய மொழி செய்தித்தாள் ஆகும். இது அக்டோபர் 16, 1794 அன்று இந்தியாவில் மதராஸ் நகரில் (இப்போது சென்னை ) கிருத்துவ சமய போதகரான ஹருதுயன் ஷிமாவோன்யனால் துவக்கப்பட்டது.[1][2][3] இது இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் ஆங்கிலம் அல்லாத செய்தித்தாள் ஆகும்.[4] மாதாந்திர இதழான இதில் முக்கியமாக கலாச்சார மற்றும் வரலாற்று சிக்கல்களை உள்ளடக்கமாக கொண்டிருந்தது.

அஸ்டாரர்
வெளியீட்டாளர்ஹருதுயன் ஷிமாவோன்யன்
ஆசிரியர்ஹருதுன் ஷிமாவோன்யன்
நிறுவியது16, அக்டோபர் 1794
மொழிஅருமேனிய மொழி
தலைமையகம்பிரித்தானிய இந்தியா, சென்னை மாகாணம், மதராசு

அஸ்டாரர் மார்ச் 1796 வரை ஒன்றரை ஆண்டுகள் வெளிவந்தது. அந்த காலகட்டத்தில், ஷிமாவோனியன் 18 இதழ்களை வெளியிட்டார், இவை மொத்தம் 965 பக்கங்கள் ஆகும்.

குறிப்புகள்

தொகு
  1. Mesrovb Jacob Seth (1937). Armenians in India, from the Earliest Times to the Present Day: A Work of Original Research. Asian Educational Services. p. 597. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0812-2. பார்க்கப்பட்ட நாள் 24 June 2016.
  2. Sebouh Aslanian (4 May 2011). From the Indian Ocean to the Mediterranean: The Global Trade Networks of Armenian Merchants from New Julfa. University of California Press. pp. 87–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-94757-3. பார்க்கப்பட்ட நாள் 24 June 2016.
  3. "October 16 is Armenian Press Day". Panorama. 16 October 2015. பார்க்கப்பட்ட நாள் 24 June 2016.
  4. Kartar Lalvani (10 March 2016). The Making of India: The Untold Story of British Enterprise. Bloomsbury Publishing. pp. 383–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4729-2484-1. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்டாரர்&oldid=3056859" இலிருந்து மீள்விக்கப்பட்டது