அஸ்திரா ஏவுகணை


அஸ்திரா[1] (சமக்கிருதம்: अस्त्रा, Astrā "வானில் பறந்து தாக்கும் ஆயுதம்") ரேடார் முறையில் வானில் இருந்து வான் தாக்கும் ஏவுகணையாகும். இது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தால் (DRDO), வடிவமைக்கப்பட்டது. இது இந்தியாவால் உருவாக்கப்பட்ட முதல் வான்-வான் ஏவுகணை ஆகும். எதிரி விமானம் 80 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போதே இந்த ஏவுகணையை செலுத்த இயலும். எதிரி விமானத்தை தொடர்ந்து துரத்தி சென்று அழிக்கும் வகையில் இதன் வழிகாட்டி அமைப்புகள் செயல்படுகின்றன.[2]

அஸ்திரா
அஸ்ட்ரா எம்.கே -1
வகைவான்-வான் ஏவுகணை
அமைக்கப்பட்ட நாடு இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன் படுத்தியவர்இந்தியா
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(DRDO)
உருவாக்கியது2017-தற்போது
அளவீடுகள்
எடை154 கிலோ
நீளம்3570 mm
விட்டம்178 mm
வெடிபொருள்15 கிலோ வெடிபொருள்
வெடிப்புத் தூண்டல் முறை
கதிரலைகும்பா அண்மை உணர்தல்

இயந்திரம்திண்ம இராக்கெட் எரிபொருள்
இறக்கை அகலம்254 mm
உந்துபொருள்திண்ம இராக்கெட் எரிபொருள்
இயங்கு தூரம்
80 km head on, 15 km tail chase
பறப்பு மேல்மட்டம்66,000 அடி
வேகம்மக் 4 +
வழிகாட்டி
ஒருங்கியம்
நிலைமத் திருப்புத்திறன் வழிகாட்டுதல்
ஏவு
தளம்
சூ-30எம்கேஐ, HAL தேஜஸ், மிராஜ் 2000 மற்றும் மிக்-29.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Bharat Rakshak on the Astra missile". Archived from the original on 2009-03-16. பார்க்கப்பட்ட நாள் 2009-03-20.
  2. Coming from India's defence unit: ASTRA missile

= வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்திரா_ஏவுகணை&oldid=3542325" இலிருந்து மீள்விக்கப்பட்டது