பிரமோஸ் என்பது ஒரு மீயொலிவேக சிறு இறக்கையுடன் கூடிய குறைந்த உயரத்தில் பறக்கவல்ல ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஆகும். இது நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி போன்ற பல விதமான வழி முறைகளில் ஏவப்படக்கூடியது. இது இந்தியாவின் (DRDO) எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பும், ரஷ்யாவின் என் பி ஓ மஷிநோஸ்ட்ரோஏணியா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய ஏவுகணையாகும்.

பிரமோஸ்
பிரமோஸ்
வகைCruise missile
அமைக்கப்பட்ட நாடு உருசியா /  இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்ததுநவம்பர் 2006
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்என் பி ஓ மஷிநோஸ்ட்ரோஏணியா (ரஷ்யா) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (இந்தியா )
ஓரலகுக்கான செலவுUS$ 2.73 million[மேற்கோள் தேவை]
அளவீடுகள்
எடை3000 கி
2500 கி (air-launched)
நீளம்8.4 மீ
விட்டம்0.6 மீ
வெடிபொருள்300 கி Conventional semi-armour-piercing

இயந்திரம்ஒருங்கிணைந்த இரண்டடுக்கு ராக்கெட்
இயங்கு தூரம்
290 கி. மீ
வேகம்Mach 2.8-3.0[1]
ஏவு
தளம்
கப்பல், நீர் மூழ்கி, போர் விமானம் and land-based mobile launchers.

இதன் பெயர் பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்க்வா என்ற நதிகளின் பெயரில் இருந்து உருவாக்கப்பட்டது ஆகும். இந்த ஏவுகணை உலகின் அதி வேகமாகச் செல்லக்கூடிய‌ ஏவுகணை ஆகும். இது மக் 2.5-2.8 வரை செல்லக்கூடிய ஆற்றல் கொண்டது.

பிரமோஸ் பிளாக்-2 ஏவுகணை தொகு

இந்திய ராணுவம் பிரமோஸ்-2 ரக ஏவுகணை சோதனையை நடத்தியது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பகுதியில் உள்ள நகரும் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை 25 கிலோ மீட்டர் தொலைவில் தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும், சோதனை வெற்றிகரமாக நடந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியா-ரஷ்யா கூட்டு திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு தயாரித்துள்ள பிரமோஸ் ஏவுகணை சோதனை இதற்கு முன்பு கடைசியாக கடந்த மார்ச் மாதம் பொக்ரானில் நடத்தப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

http://www.hinduonnet.com/2005/04/16/stories/2005041602941400.htm பரணிடப்பட்டது 2010-08-22 at the வந்தவழி இயந்திரம்

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமோஸ்&oldid=3350345" இலிருந்து மீள்விக்கப்பட்டது