அஸ்மத் கலாச்சாரம் மற்றும் முன்னேற்ற அருங்காட்சியகம், அகட்ஸ், பப்புவா மாகாணம்

இந்தோனேசியாவின், பப்புவா மாகாணத்தில் உள்ள அருங்காட்சியகம்

அஸ்மத் கலாச்சார மற்றும் முன்னேற்ற அருங்காட்சியகம் (Asmat Museum of Culture and Progress) (AMCP) இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் உள்ள அகட்ஸ் நகரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும்.

கருத்துருவாக்கம்

தொகு

இந்த அருங்காட்சியகத்திற்கான கருத்துருவாக்கம் பாரம்பரிய அஸ்மத் கலையைப் பாதுகாப்பதற்கும் அஸ்மத் மக்களுக்கு பொருளாதார விற்பனை நிலையங்களாக அமைவதற்கும் ஒரு ஆதாரமாக 1969 ஆம் ஆண்டில் கத்தோலிக்க குரோசியர் தூதுவரான ஃபிராங்க் ட்ரென்கென்ஷூ என்பவரால் அமைக்கப்பட்டது. இது அக்ட்ஸ்-அஸ்மத் பிரிவைச் சேர்ந்த கத்தோலிக்க குரோசியர் மறைமாவட்டத்தால் கட்டப்பட்டது, இதன்கீழ் அருங்காட்சியக நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மேலும் குரோசியர் பாதிரிமார்கள் மற்றும் சகோதரர்கள் பிஷப் அல்போன்ஸ் சோவாடா ஆகியோரால் ஆதரவு தரப்பட்டு அமைந்ததாகும். இவர்கள் முதலில் அமெரிக்காவில் உள்ள மினசோட்டா என்னுமிடத்தில் அமைந்துள்ள எல்ம்டேலைச் சேர்ந்தவர்கள் ஆவர்.[1][2]

அஸ்மத் நம்பிக்கை

தொகு

அஸ்மத்தின் நம்பிக்கை மரணம் என்பதானது மந்திரம் அல்லது கொலை மூலம் மட்டுமே நிகழ்கிறது என்பதாகும். இறந்தவர்களின் ஆவிகள் பழிவாங்கலைக் கோர ஆரம்பிக்கின்றன. ஒரு எதிரியின் மரணமே கொலை செய்யப்பட்ட நபரின் ஆவிகள் திருப்தி அடைய முக்கிய காரணியாகிறது. இறந்தவர்களுக்காக, வாழ்வோர் தாம் வாழும் வாழும் நிலத்தை விட்டுக் கொடுக்கின்றனர். மரணத்தின் மூலம்தான் வாழ்க்கை தொடங்க முடியும். 1953 ஆம் ஆண்டில் அஸ்மட்டில் ஒரு நிரந்தர நிலையத்தை மேலை நாட்டவர் முதலில் நிறுவினார். ஒரு டச்சு பாதிரியார் சுஜுரு கிராமத்திற்கு வெளியே குடியேறினார். அந்த இடம் அகட்ஸ் என்று அழைக்கப்பட்டது. பின்னர் அந்த இடமானது அரசாங்கத்திற்கு கைமாறியது. நாளடைவில் அது வர்த்தக நடவடிக்கைகளின் மையமாக மாறத் தொடங்கியது. தந்தையின் வருகைக்கு முன்பு அஸ்மத்துக்கு வெளி உலகத்துடன் கொஞ்சம் தொடர்பு இருந்தது. தற்போது அஸ்மத் போர் தணிந்துள்ளது. சில சமயங்களில் கிராமங்களுக்கிடையில் மற்றும் கிராமங்களுக்குள் கூட அவ்வப்போது விரிவடைகிறது, ஆனால் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் அல்லது மிஷனரி செல்வாக்கின் கீழ் உள்ள பகுதிகளில் உண்மையான போர் மறைந்துவிட்டது எனலாம்.[3]

திறப்பு

தொகு

அமெரிக்க கலைஞரான டோபியாஸ் ஷீனிபாம் மற்றும் உர்சுலா மற்றும் குண்டர் கொன்ராட் ஆகியோர் இந்த அருங்காட்சியகத்தை நிறுவ உதவினர். இந்த அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 17, 1973 ஆம் நாள் அன்று திறந்து வைக்கப்பட்டது.[4]

சேகரிப்பு

தொகு

இந்த அருங்காட்சியகம் தன் சேகரிப்பில் சுமார் 1,200 பொருட்களைக் கொண்டு அமைந்துள்ளது. 300 க்கும் மேற்பட்ட சிற்பங்கள், மூதாதையர் பயன்படுத்திய கேடயங்கள் மற்றும் டிரம்ஸ் உள்ளிட்ட பொருள்களுடன் 600 க்கும் மேற்பட்ட பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[5]

பின்னர், அமெரிக்காவின் தனது சொந்த இடமான செயின்ட் கிளவுட், எம்.என்., க்கு பிஷப் எமரிட்டஸ் சோவாடா திரும்பிய பின்னர் அவர் இரண்டாவது அஸ்மத் அருங்காட்சியகத்தை நிறுவுவதில் முக்கியமான பங்கினை வகித்தார், அமெரிக்க அஸ்மத் கலை அருங்காட்சியகம் 1995 ஆம் ஆண்டில் மினசோட்டாவில் உள்ள செயின்ட் பால் என்னுமிடத்தில் அமைந்துள்ள செயின்ட் தாமஸ் பல்கலைக்கழகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதனை உணர்த்தும் விதமாக அங்கு AMAA மற்றும் AMAA @ UST என்ற சுருக்கப் பெயர்கள் பொறித்து வைக்கப்பட்டுள்ளன.[2]

இயக்குநர்

தொகு

2007 ஆம் ஆண்டில் அஸ்மத் கலாச்சார மற்றும் முன்னேற்ற அருங்காட்சியகத்தின் இயக்குனராக எரிக் சார்க்கோல் ஜான் என்பவர் பணியாற்றி வருகிறார். அவருக்கு உதவியாளராக ஓஹோவிரின் என்பவர் பணியாற்றி வருகின்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிதியுதவி அஸ்மத் மர வேலைப்பாடு என்ற பெயரிலான திட்டத்தின்படி 1968-1974 உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் ஆண்டுதோறும் மரத்தில் செதுக்குதல் தொடர்பான போட்டியினை நடத்தி வருகிறது. மேலும் அது ஏலத்தையும் நடத்தி வருகிறது. அருங்காட்சியகத்தின் உதவியோடு 31 வது அஸ்மத் கலாச்சார விழா 2015 அக்டோபர் 8-13 ஆம் நாள்களில் நடத்த திட்டம் முன்வைக்கப்பட்டது.[4][6]

குறிப்புகள்

தொகு
  1. "The late Bishop Alphonse Sowada: 40 years of missionary service; Crosiers and the Asmat; Asmat Museum: Preservation of a People". Catholic Diocese of Saint Cloud Mission Office. Archived from the original on 17 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 16 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "AMAA@UST". St. Thomas University, St. Paul, MN, US. பார்க்கப்பட்ட நாள் 16 July 2015.
  3. Schneebaum Tobias, THE ASMAT MUSEUM OF CULTURE AND PROGRESS, Cultural Survival Quarterly Magazine, December 1982
  4. 4.0 4.1 "Asmat History". Lowell D. Holmes Museum of Anthropology, Wichita State University, US. Archived from the original on 10 July 2015. பார்க்கப்பட்ட நாள் 16 July 2015.
  5. Asmat: Perception of Life in Art: The Collection of the Asmat Museum of Culture and Progress. K. Kühlen Verlag GmbH & Co. KG.
  6. "31st Asmat Culture Festival sponsored by the Museum". Asmat Museum of Culture and Progress. பார்க்கப்பட்ட நாள் 16 July 2015.

வெளி இணைப்புகள்

தொகு