அஸ்வினி கல்சேகர்
அஸ்வினி கல்சேகர் (Ashwini Kalsekar) ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் ஏக்தா கபூரின் தொலைக்காட்சித் நாடகத் தொடரான "கசாம் சே" என்ற நிகழ்ச்சியில் "ஜிக்யாசா வாலியா" என்ற பாத்திரத்திலும் [1] மற்றும் "ஜானி காதர்" என்றத் தொடரில் பிரகாஷின் மனைவி வர்ஷா பாத்திரத்திலும் நடித்ததற்காக பெரிதும் அறியப்படுகிறார்.
அஸ்வினி கல்சேகர் | |
---|---|
பிறப்பு | அஸ்வினி கல்சேகர் 22 சனவரி 1970 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
இருப்பிடம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
கல்வி | இளங்கலை |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1991முதல் தற்போது வரை |
அறியப்படுவது | "காசாம் சே" வில் ஜிக்யாசா வாலியா & "ஜோதா அக்பர்" என்ற தொலைக்காட்சித் தொடரில் "மஹன் அங்கா" |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | " இத்னா கரோ நா ம்ஜே பியார்" இல் "பாம் கன்னா" |
சொந்த ஊர் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
பெற்றோர் | அனில் கல்சேகர் (தந்தை) |
வாழ்க்கைத் துணை | நிதிஷ் பாண்டே]] (தி. 1998; பிரிந்தனர் 2002) முரளி சர்மா (தி. 2009) |
சொந்த வாழ்க்கை
தொகுஅஸ்வினி கல்சேகர் கொங்கனி தேசஸ்த் பிராமணர் குடும்பத்தின் கோயன் பரம்பரையில் 1970 ஜனவரி 22 அன்று மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்துள்ளார். இவரதுஇ த்ந்தை அனில் கல்சேகர் ஒரு வங்கியில் பணி புரிந்தவர். 1991இல் அஸ்வினி தனது இளங்கலைப் பட்டப்படிப்பை மும்பையில் முடித்தார். அவர் 1991 ல் இருந்து 1994 வரை படிப்பை முடித்த பிறகு நாடகத்த்தில் நுழைந்தார். 1992 ல் இருந்து 1993 வரை நடிகை நீனா குப்தா விடம் நடிப்பு பயிற்சி மேற்கொண்டு, தனது கனவை நினைவாக்க முயன்றார். 1992 முதல் 1995 வரை "முசாமீல் வாகில்" என்ற நாடக பயிற்சியாளரிடம் இவர் பயிற்சி பெற்றார். அஸ்வினி நன்கு பயிற்சியளிக்கப்பட்ட கதக் நடனக் கலைஞர் ஆவார்.[2] அஷ்வினி 1998 ல் நிதிஷ் பாண்டே என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 2002 ஆம் ஆண்டில் பல்வேறு அறியப்படாத காரணங்களால் இவர்கள் பிரிந்தனர். பின்னர் அவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகரான முரளி ஷர்மாவை திருமணம் செய்துகொண்டார்.[3]
தொழில்
தொகு1996 இல், அஸ்வினி மராத்தி திரைப்படமான "துலா ஜபார் லா" படத்தில் நடித்தார். தொடர்ந்து மராத்தியில் பல படங்களில் நடித்தார், அங்கு அவர் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.
1990 களின் நடுப்பகுதியில் அவர் "சாந்தி" போன்ற தொடர் நிகழ்ச்சிகளுடன் தனது தொலைக்காட்சி வாழ்க்கையைத் தொடங்கினார்,[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jaya is a pal: Ashwini Kalsekar - Times of India".
- ↑ Ashwini Kalsekar:An Actress & a Trained Kathak Dancer பரணிடப்பட்டது 10 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம்
- ↑ ""I would love to work with Aamir Khan" : Ashwini Kalsekar". 9 July 2012. Archived from the original on 9 July 2012.
- ↑ "The bad girl!". 13 September 2008 – via www.thehindu.com.
- ↑ "Ashwini Kalsekar: No one remembers that I have also played positive characters - Times of India".