அஹம் பிரம்மாஸ்மி என்ற மகாவாக்கியம்
(அஹம் பிரம்மாஸ்மி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி மகாவாக்கியங்கள் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
அஹம் பிரம்மாஸ்மி (Aham Brahmasmi) (சமசுகிருதம்:अयम् आत्मा ब्रह्म) என்பது `நான் பரம்பொருளாக இருக்கிறேன்` என்று பொருள்படும் மகாவாக்கியம் ஆகும் (பிரகதாரண்யக உபநிடதம் (1.4.10). அத்வைத மரபில் தத்துவமசி என்ற மகாவாக்கியம் உபதேச வாக்கியம் என்றும், `அஹம் பிரம்மாஸ்மி` என்ற மகாவாக்கியம் அனுபவ வாக்கியம் என்றும் அத்வைத வேதாந்திகள் கூறுகின்றனர்.
இங்கும் அஹம் என்பது சீவ சைதன்னியத்தையும், பிரம்மம் என்பது பிரம்ம சைதன்னியத்தையும் குறிப்பிடுவதால் அவைகளின் ஒருமையை பாகலட்சணையின் மூலம் விசாரணை செய்து தத்துவமசி என்ற மகாவாக்கியத்தின் விசயத்தில் விவரித்து இருப்பதை போன்றே `அஹம் பிரம்மாஸ்மி` என்ற மகாவாக்கியத்தின் பொருளை அறிந்து கொள்ளவேண்டும். துறவற வாழ்வை மேற்கொள்ளும் துறவிகளுக்கு மகா வாக்கியங்களின் கருத்து விரிவாக விளக்கப்படுகிறது.
பிற மகா வாக்கியங்கள்
தொகு- பிரக்ஞானம் பிரம்ம (प्रज्ञानं ब्रह्म) - "பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன்" (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்)
- அயம் ஆத்மா பிரம்ம (अयम् आत्मा ब्रह्म) - "இந்த ஆத்மா பிரம்மன்"(அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம்)
- தத் த்வம் அஸி (तत् त्वं असि) - "அது (பிரம்மம்) நீ" (சாம வேதத்தின் சாந்தோக்கிய உபநிடதம்)
உசாத்துணை
தொகு- பிரகதாரண்யக உபநிடதம் Brihadaranyaka Upanishad complete PDF ebook