அ. ஆ. ரெ. மகாவீர் பொறியியல் கல்லூரி
அ. ஆ. ரெ. மகாவீர் பொறியியல் கல்லூரி என்பது தென்னிந்தியாவில் தெலங்காணா தலைநகரான ஐதராபாத்தில் 2010 ஆம் ஆண்டில் மகளிருக்காக துவங்கப்பட்ட ஒரு பொறியியல் கல்லூரியாகும்.
அஞ்சம்மா அகி ரெட்டி மகளிர் பொறியியல் கல்லூரி | |
வகை | தனியார் பொறியியல் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2010 |
நிறுவுனர் | மகாவீர் கல்விச் சங்கம் |
சார்பு | ஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு |
தலைவர் | எஸ். ஜெயா லக்ஷ்மி |
தலைவர் | எஸ்.சுரேந்தர் ரெட்டி |
முதல்வர் | முனைவர் ஜி. சதீஷ் பாபு |
அமைவிடம் | வியாசபுரி, பண்ட்லகுடா, அஞ்சல்: கேசவ்கிரி , , , 500005 , 12°58′43″N 80°14′36″E / 12.978622°N 80.243273°E |
வளாகம் | நகர்ப்புறம் |
மொழி | ஆங்கிலம் |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஐதராபாத் (JNTUH) உடன் இணைக்கப்பட்டுள்ள[1] இக்கல்லூரி, மஹாவீர் கல்விச் சங்கத்தினால் நிர்வகிக்கப்படுகிறது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவினாலும் ஐதராபாத் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில உயர்கல்வி அமைப்பினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வரலாறு
தொகுமகாவீர் கல்விச் சங்கத்தால் 2010 ஆம் ஆண்டு இக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் மூலம் ஏற்கனவே மஹாவீர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் என்ற கல்லூரியும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இந்த மகாவீர் கல்விச் சங்கத்தின் தலைவர் சுதர்சன் ரெட்டி மற்றும் செயலர் சுரேந்தர் ரெட்டி ஆகியோரின் முன்னெடுப்பால், 2010 ஆம் ஆண்டு பெண்களுக்கான சிறப்பு பொறியியல் கல்லூரியைத் தொடங்க முடிவு செய்து, அதற்கு அவர்களின் பெற்றோர்களான அஞ்சம்மா மற்றும் ஆகி ரெட்டியின் பெயரையே சேர்த்து அஞ்சம்மா ஆகி ரெட்டி மகளிர் பொறியியல் கல்லூரி எனச் சூட்டினார்கள். பின்னர் இருபாலரும் படிக்கும் கல்லூரியாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அ.ஆ.ரெ மகாவீர் பொறியியல் கல்லூரி என மறுபெயரிடப்பட்டுள்ளது.[2]
அமைவிடம்
தொகுஇந்க்த கல்லூரி ஐதராபாத் மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளது, மேலும் ஆந்திர அரசுப்பேருந்துகள் மற்றும் மெட்ரோ தொடருந்து சேவையுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது, மாணவர்களின் வசதிக்காக நகரத்தின் பல இடங்களில் இருந்து அதன் சொந்த பேருந்துகளை இயக்கி வருகிறது.
துறைகள்
தொகுஇக்கல்லூரி ஐந்து இளங்கலைப் படிப்புகளை பொறியியல் துறையில் வழங்குகிறது
- இயந்திர பொறியியல்
- மின்னியல் மர்றும் மின்னணுவியல் பொறியியல்
- மிண்ணனுவியல் மற்றும் தகவல் தொழில்நிட்ப பொறியியல்
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல்)
ஒவ்வொரு இளங்கலைப் பாடத்தின் காலமும் நான்கு ஆண்டுகளாகும்.
வசதிகள்
தொகுகற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறையை எளிதாக்குவதற்கு இக்கல்லூரி சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
- ஆங்கில மொழி ஆய்வகம்
- மின்னணு சுற்றுகள் பகுப்பாய்வு ஆய்வகம்
- மின்னணு சாதனங்கள் & சர்க்யூட் ஆய்வகம்
- அடிப்படை மின் பொறியியல் ஆய்வகம்
- மின் இயந்திரங்கள் ஆய்வகம்
- ஐசி அப்ளிகேஷன் ஆய்வகம்
- மைக்ரோ பிராசசர் & மைக்ரோகண்ட்ரோலர் ஆய்வகம்
- டிஜிட்டல் சிக்னல் ப்ராசசிங் ஆய்வகம்
- அனலாக் கம்யூனிகேஷன் ஆய்வகம்
- இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வகங்கள்
- கணினி ஆய்வகம்
- நூலகம் - இக்கல்லூரியில் 2983 தொகுதிகள் மற்றும் 15 பருவ இதழ்கள் கொண்ட முழு தானியங்கி நூலகம் அமைக்கபட்டுள்ளது.