அ. கெ. ஆறுமுகம்

அ. கெ. ஆறுமுகம் (H. G. Arumugam)(பிறப்பு 12 ஏப்ரல் 1938) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியினைச் சேர்ந்தவர். இவர் அரூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார். ஆறுமுகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 1977ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் பர்கூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1977 பர்கூர் அதிமுக 28,812 48.94[2]

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை ”யார் எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. 01.09.1977: Tamil Nadu Legislative Assembly Department. 1977. பக். 51. 
  2. Election Commission of India. "1977 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._கெ._ஆறுமுகம்&oldid=3486073" இலிருந்து மீள்விக்கப்பட்டது