அ. சண்முகம்

அ. சண்முகம் (A.Shanmugam) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார்.[1] இவர் கோயம்புத்தூர் மாவட்டம் எட்டிமடை பகுதியினைச் சார்ந்தவர். பிச்சானூர் அரசு மேனிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியினை பயின்றுள்ள சண்முகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "SHANMUGAM.A MLA of Kinathukadavu Tamil Nadu contact address & email". nocorruption.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
  2. "Shanmugam .a(AIADMK):Constituency- KINATHUKADAVU(COIMBATORE) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._சண்முகம்&oldid=3406206" இலிருந்து மீள்விக்கப்பட்டது