அ. ரெங்கசாமி

மலேசியத் தமிழ் எழுத்தாளர்

அ. ரெங்கசாமி (பி: 1930) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கோலலங்காட் ரெங்கசாமி' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும்கூட. மேலும், இவர் மலேசியாவில் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர். மற்றும் மலேசியாவில் தமிழர்களின் வரலாற்றைத் தம் நாவல்களில் யதார்த்தம் குலையாமல் சொல்லியிருக்கிறார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

தொகு

1950 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், நாவல்கள், மேடை மற்றும் வானொலி நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

தொகு
  • "காமாட்சி விளக்கு" (சிறுகதைகள்);

நாவல்கள்

தொகு

பரிசில்களும், விருதுகளும்

தொகு
  • 2005இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அஸ்ட்ரோ தொலைக்காட்சி, மலேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் இவரது "லங்காட் நதிக்கரை" நாவல் முதன்மைப் பரிசையும் பி. பி. நாராயணன் விருதையும் வென்றது.
  • "உயிர்பெறும் உண்மைகள்" தமிழ் நேசன் நாவல் போட்டியில் முதல் பரிசு
  • 2005இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க தங்கப் பதக்கம்

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._ரெங்கசாமி&oldid=3230641" இலிருந்து மீள்விக்கப்பட்டது