ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள்

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள் (International Day of Innocent Children Victims of Aggression) என்பது ஆண்டுதோறும் சூன் 4 அன்று ஐக்கிய நாடுகளால் நினைவுகூரப்படும் ஒரு நாளாகும். இது 1982 ஆகத்து 19 முதல் ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது.

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள்
நாள்4 சூன்
நிகழ்வுஆண்டுதோறும்

ஆரம்பத்தில் இந்நாள் 1982 லெபனான் போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மீது கவனம் செலுத்தியது, பின்னர் இதன் நோக்கம் "உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான பாதிப்புகளுக்கு ஆளான உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் அனுபவிக்கும் வலியை" உணர்ந்துகொள்வதாக விரிவடைந்தது. இந்த நாள் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐநாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.[1]

ஐநா தீர்மானம் ஈ-7/8

தொகு

ஐக்கிய நாடுகளின் ஏழாவது அவசர சிறப்பு அமர்வில் இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு குறித்த கேள்வியைக் கருத்தில் கொண்ட ஐநா பொதுச் சபை, "இசுரேலின் ஆக்கிரமிப்புச் செயல்களால் பாதிக்கப்பட்ட ஏராளமான அப்பாவி பாலத்தீன, லெபனான் குழந்தைகளைப் பார்த்து மலைத்துப்போனதில்," ஒவ்வொரு ஆண்டும் சூன் 4 ஐ ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாளாக நினைவுகூர முடிவு செய்தது. 31-வது முழுமையான கூட்டம் 19 ஆகத்து 1982.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. UN event page noting this day
  2. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (25 August 1982). "International Day of Innocent Children Victims of Aggression : resolution" (PDF). United Nations. Archived from the original (PDF) on 29 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 June 2012.

வெளி இணைப்புகள்

தொகு