சூன் 4
நாள்
(4 சூன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூன் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV |
சூன் 4 (June 4) கிரிகோரியன் ஆண்டின் 155 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 156 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 210 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
தொகு- 1561 – இலண்டனின் பழைய புனித பவுல் பேராலயத்தின் கோபுரம் மின்னல் தாக்குண்டு சேதமடைந்தது. இது பின்னர் திருத்தப்படவில்லை.
- 1615 – சப்பானில் தொக்குகாவா லெயாசு தலைமையிலான படைகள் ஒசாக்கா கோட்டையைக் கைப்பற்றின.
- 1707 – ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினர்.[1]
- 1745 – ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: மகா பிரெடெரிக்கின் புருசியப் படைகள் ஆத்திரியப் படைகளைத் தோற்கடித்தது.
- 1760 – நியூ இங்கிலாந்து தோட்டக்காரர்கள் கனடாவில் நோவா ஸ்கோசியாவில் அக்காடியர்களால் கைப்பற்றப்பட்ட தமது நிலங்களை மீளக் கைப்பற்றுவதற்காக அங்கு வந்து சேர்ந்தனர்.
- 1783 – மொண்ட்கோல்ஃபியர் சகோதரர்கள் தமது வெப்ப ஊதுபையை பொதுமக்கள் முன்னிலையில் சோதித்தனர்.
- 1802 – சார்தீனியா மன்னர் நான்காம் சார்லசு இம்மானுவேல் தனது தம்பி விக்டர் இம்மானுவேலுக்காக முடி துறந்தார்.
- 1812 – லூசியானா அமெரிக்க மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து, லூசியானா பிராந்தியம் மிசூரி பிராந்தியம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 1859 – இத்தாலிய விடுதலைப் போர்கள்: மசெண்டா சமரில் மூன்றாம் நெப்போலியன் தலைமையில் பிரெஞ்சு இராணுவம் ஆத்திரிய இராணுவத்தைத் தோற்கடித்தது.
- 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டமைப்புப் படைகள் பிலோ கோட்டையில் இருந்து பின்வாங்கின.
- 1876 – டிரான்ஸ்கொன்டினென்டல் எக்சுபிரசு என்ற தொடர்வண்டி நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு சான் பிரான்சிஸ்கோவை 83 மணி 39 நிமிடங்களில் முதலாவது கண்டங்களிடை தொடருந்துப் பாதை வழியே சென்றடைந்தது.
- 1878 – உதுமானியப் பேரரசு சைப்பிரசை ஐக்கிய இராச்சியத்துக்கு கொடுத்தது.
- 1896 – ஹென்றி ஃபோர்ட் பெற்றோலில் இயங்கும் தனது முதலாவது தானுந்தை வெற்றிகரமாகச் சோதித்தார்.
- 1912 – மாசச்சூசெட்ஸ் குறைந்தபட்ச ஊழியத் தொகையை நிர்ணயம் செய்த முதலாவது அமெரிக்க மாநிலமானது.
- 1913 – பெண்கள் வாக்குரிமைப் போராளி எமிலி டேவிசன் குதிரைப்பந்தய மைதானத்தில் அத்துமீறி நுழைந்தபோது இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் குதிரையுடன் மோதுண்டு படுகாயம் அடைந்து, நான்கு நாட்களின் பின்னர் இறந்தார்.
- 1917 – முதலாவது புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டன.
- 1919 – பெண்களின் உரிமைகள்: பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டமூலத்துக்கு அமெரிக்க சட்டமன்றம் அனுமதி அளித்தது.
- 1920 – பாரிசில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடு ஒன்றின் படி அங்கேரி தனது 71% நிலத்தையும், 63% மக்களையும் இழந்தது.
- 1928 – சீனக் குடியரசின் அரசுத் தலைவர் சாங் சுவோலின் சப்பானியக் கையாள் ஒருவனினால் படுகொலை செய்யப்பட்டார்.
- 1932 – சிலியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில், சிலி சோசலிசக் குடியரசு நிறுவப்பட்டது. இது நான்கு மாதங்களில் கலைந்தது.
- 1939 – பெரும் இன அழிப்பு: கியூபாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 963 யூத அகதிகளை ஏற்றிச் சென்ற செயின்ட் லூயிசு என்ற கப்பல் ஐக்கிய அமெரிக்காவினால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு, ஐரோப்பா திரும்பியது. இந்த அகதிகளில் 200 பேர் வரை பின்னர் செருமனியின் நாட்சி வதைமுகாம்களில் சிறைவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் டன்கிர்க் என்ற இடத்தில் இருந்த 338,000 பிரித்தானியப் படைகள் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டனர். டைனமோ நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: மிட்வே தீவுகள் மீது சப்பான் தாக்குதலை ஆரம்பித்தது.
- 1943 – அர்கெந்தீனாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் ரமோன் கஸ்டீல்லோ பதவியிழந்தார்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கக் கடற்படையினர் செருமானிய நீர்மூழ்கிக் கப்பல் யூ-505 ஐக் கைப்பற்றினர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: ரோம் நகரம் நேச அணிகளிடம் வீழ்ந்தது.
- 1961 – பனிப்போர்: அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சு ஆகிய நாடுகள் கிழக்கு பெர்லினுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு தாம் கிழக்கு செருமனி உடன் ஒப்பந்தம் செய்யப்போவதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் வியன்னா மாநாட்டில் எச்சரித்தார்.
- 1967 – இங்கிலாந்தில் கனடிய விமானம் வீழ்ந்ததில் 72 பேர் உயிரிழந்தனர்.
- 1970 – தொங்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1979 – கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் ஜெனரல் ஆச்சியாம்பொங் பதவியிறக்கப்பட்டு ஜெரி ரோலிங்க்ஸ் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
- 1981 – யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல்கள் நடைபெற்றன.
- 1987 – பூமாலை நடவடிக்கை: இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட வான்பரப்பில் அத்து மீறி உள்நுழைந்த இந்திய வான்படை விமானங்கள் யாழ் குடாநாட்டின் மீது உணவுப் பொதிகளை வீசியது.
- 1988 – சோவியத் ஒன்றியத்தில் கசக்ஸ்தான் நோக்கிச் சென்ற தொடருந்து வெடித்ததில் 91 பேர் உயிரிழந்தனர். 1,500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- 1989 – ரூகொல்லா கொமெய்னியின் இரப்பை அடுத்து ஈரானின் புதிய தலைவராக அலி கொமெய்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. பல மாணவர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- 1989 – போலந்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சொலிடாரிட்டி இயக்கத்தின் வெற்றி கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்துக்கு எதிரான புரட்சியை முனெடுக்க உதவியது.
- 1989 – உருசியாவில் ஊஃபா என்ற இடத்தில் இரண்டு தொடருந்துகள் இயற்கை எரிவளிமக் குழாய் ஒன்றைக் கடக்கையில் ஏற்பட்ட விபத்தில் 575 பேர் உயிரிழந்தனர்.
- 1996 – ஐரோப்பாவின் ஆரியான் 5 ஏவுகலம் ஏவப்பட்டு 37 செக்கன்களில் வெடித்துச் சிதறியது.
- 2001 – அரச மாளிகையில் சூன் 1 இல் இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து ஞானேந்திரா நேபாளத்தின் மன்னராக முடி சூடினார்.
- 2010 – ஸ்பேஸ் எக்சு பால்கன் 9 முதலாவது ஏவுகலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
- 2015 – அக்ரா நகரில் எரிபொருள் நிலையம் ஒன்று செடித்ததில் 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
தொகு- 1738 – ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் (இ. 1820)
- 1822 – உலூத்விக் சுவார்சு, உருசிய-செருமானிய வானியலாளர் (இ. 1894)
- 1887 – பெ. வரதராஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (இ. 1957)
- 1910 – கிறிஸ்தோபர் கொக்கரல், காற்றுமெத்தை உந்தைக் கண்டுபிடித்த ஆங்கிலேயப் பொறியியலாளர் (இ. 1999)
- 1931 – டி. எம். ஜயரத்ன, இலங்கையின் 14-வது பிரதமர் (இ. 2019)
- 1937 – வயலார் ரவி, இந்திய அரசியல்வாதி
- 1941 – தர்சன் அரங்கநாதன், இந்தியக் கரிமவேதியியலாளர் (இ. 2001)
- 1946 – எஸ். பி. பாலசுப்ரமணியம், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (இ. 2020)
- 1959 – அனில் அம்பானி, இந்தியத் தொழிலதிபர்
- 1974 – ஜேக்கப் சகாயகுமார் அருணி, தென்னிந்திய சமையற்கலை நிபுணர் (இ. 2012)
- 1975 – ஏஞ்சலினா ஜோலி, அமெரிக்க நடிகை
- 1984 – பிரியாமணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
தொகு- 1798 – கியாகோமோ காசநோவா, இத்தாலிய நாடுகாண் பயணி (பி. 1725)
- 1925 – வ. வே. சு. ஐயர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1881)
- 1932 – மகேந்திரநாத் குப்தர், இராமகிருட்டிணரின் இல்லறச் சீடர் (பி. 1854)
- 1941 – இரண்டாம் வில்லியம், செருமானியப் பேரரசர் (பி. 1859)
- 1959 – ஜான் திவி, மலேசியத் தமிழ் அரசியல்வாதி (பி. 1904)
- 1963 – வி. ஏ. கந்தையா, இலங்கை அரசியல்வாதி (பி. 1891)
- 2001 – தர்சன் அரங்கநாதன், இந்தியக் கரிமவேதியியலாளர் (பி. 1941)
- 2005 – நந்தி, ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர், மருத்துவர்
- 2010 – ரேமண்ட் ஆல்ச்சின், பிரித்தானியத் தொல்லியலாளர் (பி. 1923)
சிறப்பு நாள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 6