மிட்வே தீவுகள்
மிட்வே பவளப்பாறை (அல்லது மிட்வே தீவு அல்லது மிட்வே தீவுகள், ஒலிப்பு: /ˈmɪdweɪ/; ஹவாய்: Pihemanu Kauihelani [1]) 2.4 ச.மை (6.2 ச.கிமீ) பரப்பளவு கொண்ட வடக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பவளப்பாறைகளாகும். ஹவாய் தீவுக்கூட்டத்தின் வடமேற்கு எல்லையில் ஹொனலுலு விற்கும் டோக்யோவிற்கும் இடையே இவை உள்ளன. இது ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமைக்குட்பட்ட நிலப்பகுதியாகும். இது பன்னாட்டு நாள் கோட்டிலிருந்து கிழக்கே 140 nmi (259 km; 161 mi) தொலைவிலும், சான் பிரான்சிஸ்கோவிற்கு மேற்கே ஏறத்தாழ 2,800 nmi (5,200 km; 3,200 mi)தொலைவிலும்,டோக்யோவிற்கு கிழக்கே 2,200 nmi (4,100 km; 2,500 mi) தொலைவிலும் உள்ளது. இது மோதிரம் போன்ற பவளப்பாறை தடுப்புடன் பல தீவுத்திட்டுகளைக் கொண்டுள்ளது. இரண்டு குறிப்பிடத்தக்க தீவுகள்,மணல் தீவு மற்றும் கிழக்குத்தீவு, மில்லியன் கணக்கான கடற்பறவைகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. தீவுகளின் அளவுகள் கீழே காண்பிக்கப்படுகிறது:
தீவு | ஏக்கர்கள் | ஹெக்டேர்கள் |
---|---|---|
மணல் தீவு | 1,200 | 486 |
கிழக்கு தீவு (Eastern Island) | 334 | 135 |
ஸ்பிட் தீவு | 15 | 6 |
மிட்வே பவளப்பாறை | 1,540 | 623 |
லகூன் | 14,800 | 6,000 |
இத்தீவுகள் வடக்கு அமெரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் ஏறத்தாழ நடுவிலும்,ஐக்கிய ராச்சியம்|இங்கிலாந்தின் கிரீன்விச்சிலிருந்து உலகின் சரிபாதிக்கு இருப்பதாலும் மிட்வே தீவுகள் என்பது காரணப்பெயராக அமைந்தது. மிட்வே தீவுகளில் உலகின் லேசன் அல்பட்ராஸ் பறவைகளில் 67-70% தொகையும் கருத்த அடிகள் கொண்ட அல்பட்ராஸ் பறவைகளில் 34-39% தொகையும் வாழுமிடமாக உள்ளது.[2] மூன்று மில்லியன் பறவைகளுக்கு புகலிடமாக விளங்கினாலும்,ஒவ்வொரு பறவையினமும் தமக்கென ோர் குறிப்பிட்ட இடத்தை பவளப்பாறையில் பேறுகாலத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளன.பதினேழு வகையான கடற்பறவைகளை இங்கு காண முடியும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://whc.unesco.org/uploads/pages/documents/document-136-1.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-12-27. பார்க்கப்பட்ட நாள் 2009-11-11.
- ↑ "U.S. Fish & Wildlife Service – Birds of Midway Atoll". Archived from the original on 2013-05-22. பார்க்கப்பட்ட நாள் 19 August 2009.
{{cite web}}
: Unknown parameter|dateformat=
ignored (help)
வெளியிணைப்புகள்
தொகு- AirNav – Henderson Field Airport : Airport facilities and navigational aids.
- Diary from the middle of nowhere பிபிசி's environment correspondent David Shukman reports on the threat of plastic rubbish drifting in the North Pacific Gyre to Midway. Accessed 2008-03-26.
- Midway Atoll National Wildlife Refuge பரணிடப்பட்டது 2005-06-18 at the வந்தவழி இயந்திரம் (this article incorporated some content from this public domain site)
- NOAA Midway Island Hawaiian Monk Seal Captive Care & Release Project
- The Battle of Midway: Turning the Tide in the Pacific, a National Park Service Teaching with Historic Places (TwHP) lesson plan
- Aviation: From Sand Dunes to Sonic Booms, a National Park Service Discover Our Shared Heritage Travel Itinerary
- Past residents of Midway Discussion of Midway related topics by former residents and those interested in Midway.
- U.S. Unincorporated Possessions. Accessed 2008-03-26.