ஆக்கோடேத்
ஆக்கோடேத் (Hakodate) என்பது யப்பானின் ஹொக்கைடோ தீவில், ஓஷிமா துணைப் பிரிவில் அமைந்துள்ள ஒரு நகரம் மற்றும் துறைமுகமாகும். இது ஓஷிமா துணைப் பிரிவின் தலைநகரம் ஆகும்.
2011 ஆம் ஆண்டு சூலை 31 கணக்கெடுப்பின் படி நகரத்தில் 143,221 வீடுகளுடன் 279,851 மக்கட் தொகை மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 412.83 என்ற மக்கட்தொகை அடர்த்தி (சதுர மைலுக்கு 1,069.2 நபர்கள்) பதிவு செய்யப்பட்டது. நகரின் மொத்த பரப்பளவு 677.77 கிமீ 2(261.69 சதுர மைல்) ஆகும். சப்போரோ மற்றும் ஆசாஹிகாவாவுக்குப் பிறகு இந்த நகரம் தற்போது ஹொக்கைடோவில் மூன்றாவது பெரிய பகுதியாக காணப்படுகின்றது.
புவியியல்
தொகுகாமெடா தீபகற்பத்தின் மையத்தில் ஆக்கோடெத் அமைந்துள்ளது.
ஆக்கோடேத் மலையில் இருந்து நகரை பார்வையிடலாம். ஆக்கொடேத் மலையின் காடுகள் நிறைந்த உச்சியை நடைப்பயணம், ஊர்திகள் அல்லது தொங்கூர்திகள் மூலம் அடையலாம். ஜே.ஆர் ஆக்கோடேத் நிலையத்திலிருந்து புறப்படும் சுற்றுலா பேருந்துகளில் பார்வையாளர்கள் ஆக்கோடேத் மலையின் உச்சியை அடையலாம். மலை உச்சியின் இரவு காட்சி யப்பான் நாட்டின் மிகச் சிறந்த ஒன்றாக புகழ்பெற்றது.
முன்னாள் கோரியாகாகு கோட்டை இப்போது ஒரு பொது பூங்காவாக பயன்படுத்தப்படுகிறது. ஹொக்கைடோவில் ஹனமி (மலர்க் காட்சி) மிகவும் பிரபலமானது. 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இப் பூங்காவில் உயரமான, வெள்ளை கோரியாகாகு கோபுரமும் இடம்பெற்றுள்ளது.
காலநிலை
தொகுகோப்பனின் காலநிலை வகைப்பாட்டின் படி, ஆக்கோடேத் காலநிலை வெப்பமான கோடையின் ஈரப்பதமான கண்டக் காலநிலையின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றது. ( டி.எஃப்.பி ) வெப்பமான மாதம் சராசரியாக 22 °C வெப்பநிலையைக் கொண்டுள்ளது. இது பனி குளிர்காலம் மற்றும் சூடான, ஈரப்பதமான கோடைகாலங்களைக் கொண்டுள்ளது.[1] இந் நகரம் நான்கு தனித்துவமான பருவங்களைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் நகரத்தில் கணிசமான அளவு பனிப்பொழிவு காணப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 380 செ.மீ (சுமார் 150 அங்குலங்கள்) பனிப்பொழிவு ஏற்படுகிறது. வசந்தம் பொதுவாக சில பனிப்பொழிவுடன் தொடங்குகிறது. ஆனால் பருவம் முன்னேறும்போது படிப்படியாக வெப்பமயமாதல் போக்கைக் காண்கிறது. கோடை காலம் பொதுவாக சூடாக இருக்கும். வெப்பமான மாதத்தில் (ஆகத்து) சராசரியாக அதிக வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இலையுதிர் பருவத்தின் பிற்பகுதிகளில் பனிப்பொழிவு வழக்கமாக பனிப்பொழிவு ஏற்படுவதில்லை.
பொருளாதாரம்
தொகுஏர் ஹொக்கைடோவின் கலைப்பிற்கு முன்னர் அதன் தலைமையிடமாக ஆக்கோடேத் இருந்தது.[2] 2006 ஆம் ஆண்டில் பிராந்திய விமான நிறுவனமான ஏர்டிரான்ஸ் ஆக்கோடேத்தை தலைமையிடமாகக் கொண்டிருந்தது.[3]
போக்குவரத்து
தொகுஆக்கோடேத் போக்குவரத்து பணியகம் டிராம் தொடருந்து சேவைகளை வழங்குகின்றது.
ஹொக்கைடோ ஷிங்கன்சென் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திறக்கப்பட்டது. இது தற்போது ஷின்-ஹமோடேட்-ஹொகுடோ நிலையத்திற்கு ஷின்-அமோரி நிலையத்திலிருந்து சீகான் சுரங்கப்பாதை வழியாக இயங்குகிறது. புதிய முனையம் ஹக்கோடேட் நிலையத்திலிருந்து 17 கிமீ (11 மைல்) தொலைவில் உள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் ஹொக்கைடோ ஷிங்கன்செனை வடக்கே சப்போரோ நிலையத்திற்கு நீட்டிக்க திட்டங்கள் உள்ளன.
ஆக்கோடேத் துறைமுகம், ஹொக்கைடோ அதிவேக நெடுஞ்சாலை, ஆக்கோடேத் விமான நிலையம் என்பன இந் நகரிற்கு சேவையாற்றுகின்றன.
சான்றுகள்
தொகு- ↑ ""Koppen Climate Classification"" (PDF). Archived from the original (PDF) on 2019-04-12.
- ↑ "Air hokodate". Archived from the original on 2004-06-11.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Airtransse". Archived from the original on 2006-01-06.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)