ஆக்டா ஐதராக்சி ஆந்திராக்குயினோன்
ஆக்டா ஐதராக்சி ஆந்திராக்குயினோன் (Octahydroxyanthraquinone) என்பது C14H8O10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆந்திராகுயினோனில் உள்ள எட்டு ஐதரசன் அணுக்கள் ஐதராக்சில் குழுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு வழிப்பெறுதியாக ஆக்டா ஐதராக்சி ஆந்திராக்குயினோன் பெறப்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,2,3,4,5,6,7,8-ஆக்டா ஐதராக்சி ஆந்திரசீன்-9,10-டையோன் | |||
வேறு பெயர்கள்
ஆக்டா ஐதராக்சி ஆந்திரசீன் டையோன்
| |||
இனங்காட்டிகள் | |||
169132-62-1 | |||
ChEBI | CHEBI:190016 | ||
ChEMBL | ChEMBL293801 | ||
ChemSpider | 8016420 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
பப்கெம் | 9840703 | ||
| |||
UNII | 62VN682KQG | ||
பண்புகள் | |||
C14H8O10 | |||
வாய்ப்பாட்டு எடை | 336.21 g·mol−1 | ||
மட. P | -0.291 | ||
காடித்தன்மை எண் (pKa) | 5.358 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
ஆக்டா ஐதராக்சி ஆந்திராக்குயினோன் 1911 ஆம் ஆண்டு இயார்ச்சு வான் இயார்யீவிக்சு என்பவரால் தயாரிக்கப்பட்டது.[1][2] 250 பாகை செல்சியசு வெப்பநிலையில் கந்தக அமிலத்தில் உள்ள போரிக் அமிலம் மற்றும் பாதரச ஆக்சைடுடன் ரூபிகலோலை (1,2,3,5,6,7-ஆறறைதராக்சி ஆந்திராக்குயினோன்) ஆக்சிசனேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம்.[3]
அனைத்து எட்டு ஐதராக்சில் குழுக்களும் நேர் சங்கிலி 1-ஆல்க்கேன்கார்பாக்சிலேட்டு குழுக்களால் (H3C-(CH2)n-COO-) இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட, n மதிப்பு 6 மற்றும் 14 இடையே உள்ள ஆக்டா ஐதராக்சி ஆந்திராக்குயினோனின் எசுத்தர்கள் நீர்ம படிகங்களாக உள்ளன. இவை நீர்மப் படிக காட்சித் தொழில்நுட்பத்தில் பயன்படுத்த ஆராயப்படுகின்றன.[3]
ஆக்டா ஐதராக்சி ஆந்திராக்குயினோன் மலேரியா ஒட்டுண்ணிக்கு எதிராகச் செயல்படுகிறது. ஆனால் ரூபிகலோல் இதைவிட 22 மடங்கு அதிகமாக செயலாற்றுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Georgievics, G. v. (1911). "Darstellung und Eigenschaften des Octooxyanthrachinons". Monatshefte für Chemie 32 (5): 347–352. doi:10.1007/BF01518160. https://zenodo.org/record/1778383.
- ↑ Wahl, Andre; Atack, F. W (1919) The Manufacture Of Organic Dyestuffs. G. Bell And Sons, Limited. Online version accessed on 22 January 2010.
- ↑ 3.0 3.1 Kumar, Sandeep (2008). "Rufigallol-based self-assembled supramolecular architectures". Phase Transitions 81: 113–128. doi:10.1080/01411590701601610.
- ↑ Winter, R (1995). "Hydroxy-anthraquinones as antimalarial agents". Bioorganic & Medicinal Chemistry Letters 5 (17): 1927–1932. doi:10.1016/0960-894X(95)00326-O.