ஆக்டினிடியா கலோசா
ஆக்டினிடியா கலோசா (Actinidia callosa, the Himalayan kiwi vine) என்பது பூக்கும் தாவரம் ஆகும். இது சீனாவின் முட்செடி குடும்பத்தின் (Actinidiaceae) கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1] இதன் பிறப்பிடம் இமயமலைத்தொடர், நடு, தெற்கு, வட சீனப் பகுதிகள், தைவான், மியான்மர், வியட்நாம், தீபகற்ப மலேசியா, சுமாத்திரா ஆகும்.[2]
ஆக்டினிடியா கலோசா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Actinidia |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/ActinidiaA. callosa
|
இருசொற் பெயரீடு | |
Actinidia callosa Lindl. | |
வேறு பெயர்கள் | |
பட்டியல்
|
உதிரக்கூடிய இலைகளைப் பெற்றிருக்கும் இக்கொடியானது 30 மீ (98 அடி) வளரும் இயல்புடையதாக உள்ளது, இதில் பலவிதமான வகைகள் வளரும் கடல் மட்ட அளவினைப் பொறுத்து (400 மீ முதல் 2600 மீ அல்லது 1300 அடி முதல் 8500 அடி வரை) வேறுபட்டு உள்ளன.[3] இதன் பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. இதன் குரோமோசாம் அடிப்படையில், இதன் பரவலிட வேறுபாடுகளைப் பெற்றிருக்கிறதா என ஆய்வு ஐயங்கள் உள்ளன.[3]
துணையினங்கள்
தொகுகீழ்காணும் வகைகள், இதன் துணையினங்களாக ஏற்கப் பட்டுள்ளன.[2]
- Actinidia callosa var. acuminata C.F.Liang - சீனா
- Actinidia callosa var. callosa – இமயமலைத்தொடர், நேபாளம், மியான்மர், வியட்நாம், தைவான், சீனா
- Actinidia callosa var. discolor C.F.Liang – தென் சீனா, வியட்நாம், தைவான்
- Actinidia callosa var. henryi Maxim. – திபேத், நடு, தென் சீனா
- Actinidia callosa var. pubescens Dunn – அசாம் மாநிலம், சுமத்திரா தீவுகள், மலேசியா
- Actinidia callosa var. strigillosa C.F.Liang – சீனா
மேற்கோள்கள்
தொகு- ↑ "Himalayan Kiwi Vine". flowersofindia.net. Flowers of India. 2023. பார்க்கப்பட்ட நாள் 3 October 2023.
- ↑ 2.0 2.1 "Actinidia callosa Lindl". Plants of the World Online (in ஆங்கிலம்). அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ. பார்க்கப்பட்ட நாள் 3 October 2023.
- ↑ 3.0 3.1 "硬齿猕猴桃 ying chi mi hou tao". Flora of China. efloras.org. 2023. பார்க்கப்பட்ட நாள் 3 October 2023.