ஆங்கிலேய நீளமுக கரணப் புறா
புறா வகை
(ஆங்கிலேய நீளமுக டம்ப்லர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆங்கிலேய நீளமுக கரணப் புறா (English Long-Faced Tumbler)[1] என்பவை ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்த புறா ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[3] இது போன்ற அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவ்வினம் சுத்தமான கால் மற்றும் இறகுடைய கால்களைக் கொண்டுள்ளது. இவற்றின் குள்ளமான அலகின் காரணமாக இவற்றிற்கு வளர்ப்பு பெற்றோர்கள் தேவை. இவ்வினம் உலகம் முழுவதும் குறிப்பாக அமெரிக்காவில் பிரபலமானதாக உள்ளது.[4]
ஆங்கிலேய நீளமுக சுத்த கால் கரணப் புறா | |
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
மற்றொரு பெயர் | ஆங்கிலேய நீளமுக சுத்த கால் கரணப் புறா,[1] ஆங்கிலேய நீளமுக இறகு கால் கரணப் புறா[2] |
வகைப்படுத்தல் | |
அமெரிக்க வகைப்படுத்தல் | கரணப் புறாக்கள், சுழல் கரணப் புறாக்கள் மற்றும் உயர் பறப்பவை[2] |
ஐரோப்பிய வகைப்படுத்தல் | கரணப் புறாக்கள் மற்றும் உயர் பறப்பவை[1] |
குறிப்புகள் | |
நீண்ட முகம் கண் மையம் மற்றும் வாய் நுனி இடையே உள்ள தூரத்தைக் குறிக்கிறது. இதன் முகம் மற்ற ஆங்கிலேய கண்காட்சி கரணப் புறாக்களுடன் ஒப்பிடும்போது மட்டும் நீளமாக உள்ளது. | |
மாடப் புறா புறா |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 EE-List of the breeds of fancy pigeons (ELFP) பரணிடப்பட்டது 2013-04-15 at the வந்தவழி இயந்திரம் by the Section for Fancy pigeons of the European Association of Poultry-, Pigeon- and Rabbit breeders – Revision 11. June 2012
- ↑ 2.0 2.1 Breeds from the NPA Standard: table of contents by group
- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
- ↑ Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.