ஆசப் உதின் அகமது

வங்காளதேச எழுத்தாளர்

ஆசப் உதின் அகமது (Ashab Uddin Ahmad இவர் அசாபுதீன் அஹ்மத் என்றும் அழைக்கப்படுகிறார்,[1] ஆஷாப் உத்தீன் அகமது [2] அல்லது முகமது அசாபுதீன் அஹ்மத் ;[3] வங்காள மொழி: আসহাব উদ্দীন আহমদ  ; ஏப்ரல் 1914-28 மே 1994) என்பவர் ஒரு வங்களாதேச எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். அவர் ஐக்கிய முன்னணிக்கான கிழக்கு வங்காள சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு கம்யூனிஸ்ட் ஆர்வலராகவும் இருந்தார். 2005 ஆம் ஆண்டில், வங்களாதேசத்தின் மிக உயர்ந்த குடிமைப் பணி விருதுகளில் ஒன்றான ஏகுஷே படக் இவருக்கு இவரின் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது. இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புகளைப் பாராட்டும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டது. இதில் வங்காளம் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட 24 நூல்களும் அடங்கும்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி தொகு

ஆசாப் உதின் ஏப்ரல் 1914 இல், சாதன்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார். தற்போது இந்த இடம் வங்களதேசத்தின் சிட்டகாங் மாவட்டத்தைச் சேர்ந்த பன்ஷ்காலி உபசிலா என அழைக்கப்படுகிறது. இது பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிப் பகுதிகளின் கீழ் இருந்தபோது வங்காள மாகாண ஒரு பகுதியாக இருந்தது. அவர் ஒரு நடுத்தர வர்க்க முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை தேயிலை தோட்ட மேலாளராக இருந்தார். சஃபர் அலி தனது முதல் திருமணத்தின் மனைவியின் மூலம் ஐந்து குழந்தைகளையும், இரண்டாவது திருமண மனைவியின் மூலம் ஆறு குழந்தைகளையும் பெற்றார்.

கல்வி தொகு

ஆஷாப் உத்தீன் ஒரு மக்தாப்பில் தனதுஆரம்பக் கல்வியினைக் கற்றார். அங்குள்ள ஒரு பள்ளியில் பயின்றார். அதன்பிறகு சாதன்பூர் ஆங்கில நடுநிலைப்பள்ளி மற்றும் பனிகிராம் உயர்நிலைப் பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்களில் 1932 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார்.[4] பனிகிராம் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, ஆஷாப் உதின் சாதன்பூரில் ஒரு நூலகத்திற்கு ஏற்பாடு செய்தார், அதற்கு அவர் சாதன்பூர் கிராம நல நூலகம் என்று பெயரிட்டார். இது சாதன்பூரில் உள்ள முதல் நூலகமாகும். மேலும் இப்பகுதியில் உள்ள சில நூலகங்களில் ஒன்றாகும். முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கு கிராமப்புறத்தில் ஒரு நூலகத்தைத் திறப்பதே இவரது நோக்கங்களில் ஒன்றாகும். ஏனெனில் அவர் அறிந்த அனைத்து கிராமப்புற நூலகங்களும் இந்து மக்கள் அதிகம் வாழ்ந்த சுற்றுப்புறங்களில் தான் அமைந்திருந்தன. தனது நண்பர்களுடன் சேர்ந்து, திருமணங்களில் பணியாளராக பணிபுரிந்து நூலகத்திற்காக பணம் திரட்டினார். இந்த பணத்தைப் பயன்படுத்தி, நூலகத்திற்கான புத்தகங்களை வாங்கினார்.[5]

1934 ஆம் ஆண்டில், ஆஷாப் உதின் அகமது சிட்டகாங் கல்லூரியில் ஐ.ஏ பட்டம் பெற்றார், அங்கு மாதம் ரூ. 20 உதவித் தொகையாக பெற்றார். 1936 இல், சிட்டகாங் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மேலும் அவர் 1939 இல் டாக்கா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[6]

விருதுகள் தொகு

அவரது வாழ்நாளில் வங்காளதேச சுதந்திர போராட்டம் மற்றும் விடுதலைப் போர் ஆராய்ச்சி மையம், சிட்டகாங் பைசாக் கொண்டாட்டக் கவுன்சில், வக்கீல் எய்ட் சொசைட்டி, சிட்டகாங் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் சிட்டகாங் மகளிர் எழுத்தாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடமிருந்து ஆஷாப் உதின் அகமது பல விருதுகளைப் பெற்றார்.[7]

சான்றுகள் தொகு

  1. Qureshi, Mahmud Shah. "Ahmad, Ashabuddin". Banglapedia. Asiatic Society of Bangladesh. பார்க்கப்பட்ட நாள் 3 February 2016.
  2. "PM distributes Ekushey Padak". News from Bangladesh. http://newsfrombangladesh.net/view.php?hidRecord=35388. பார்த்த நாள்: 3 February 2016. 
  3. East Pakistan (Pakistan). Statistical Abstract for East Pakistan, Volume 3. Provincial Statistical Board and Bureau of Commercial and Industrial Intelligence. https://books.google.com/?id=BpIUAQAAMAAJ&q=%22ashabuddin+ahmad%22&dq=%22ashabuddin+ahmad%22. பார்த்த நாள்: 3 February 2016. 
  4. Molla, Yakub Ali (2001) (in bn). Gonomanusher shathi Komred Ashab Uddin. Chittagong: Ashab Uddin Sriti Shongshod. பக். 3–6. 
  5. Molla, Yakub Ali (2001) (in bn). Gonomanusher shathi Komred Ashab Uddin. Chittagong: Ashab Uddin Sriti Shongshod. பக். 118–119. 
  6. Molla, Yakub Ali (2001) (in bn). Gonomanusher shathi Komred Ashab Uddin. Chittagong: Ashab Uddin Sriti Shongshod. பக். 6. 
  7. Molla, Yakub Ali (2001) (in bn). Gonomanusher shathi Komred Ashab Uddin. Chittagong: Ashab Uddin Sriti Shongshod. பக். 115. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசப்_உதின்_அகமது&oldid=2868340" இலிருந்து மீள்விக்கப்பட்டது