ஆசாதி பிஜ்
ஆசாதி பிஜ் (Ashadhi Bij) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் பிரதேச மக்களின் புத்தாண்டு ஆகும். ஆசாதி பிஜ் எனும் புத்தாண்டு இந்து நாட்காட்டியின் படி ஆடி மாதத்தில் வரும் வளர்பிறையின் இரண்டாம் நாளில் ஆசாதி பிஜ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இப்புத்தாண்டு கட்ச் பகுதியில் மழையின் தொடக்கத்துடன் தொடர்புடையது.[1]