ஆசாத் சமான்

இந்திய அரசியல்வாதி

ஆசாத் சமான் ( Azad Zaman) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். வங்காள அரசியல்வாதியான இவர் மருத்துவராகவும் சமூக சேவகராகவும் அறியப்படுகிறார். மேற்கு கரோ இல்சு மாவட்டத்தில் உள்ள இராச்பாலா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மேகாலயா சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்தார்.

வாழ்க்கை தொகு

ஆசாத் சமான் 1974 ஆம் ஆண்டு மேகாலயாவில் பெங்காலி முசுலிம் குடும்பத்தில் அல்காச்சு சூரத் சமானின் மகனாகப் பிறந்தார். . மருத்துவராக இருந்த இவர், பின்னர் அரசுப் பணியில் சேர்ந்தார். இவரது மனைவி தொழிலில் ஆசிரியராக உள்ளார், [1] மேற்கு கரோ மலைகளில் உள்ள போவாபரி,பகுதியில் வசித்து வந்தனர். [2]

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மேகாலயா சட்டப் பேரவைத் தேர்தலில் இராச்பாலாவுக்காக சுயேச்சை அரசியல்வாதியாகப் போட்டியிட்டார், ஆனால் அசாகெல் சிராவிடம் தோல்வியடைந்தார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார், [3] 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மேகாலயா சட்டமன்ற தேர்தலில் சிராவை தோற்கடித்தார். [4]

இறப்பு தொகு

47 வயதில் மாரடைப்பு காரணமாக 4 மார்ச் 2021 அன்று ஆசாத் சமான் இறந்தார் [5] மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் கொண்டது இவர் குடும்பமாகும் [6]

மேற்கோள்கள் தொகு

  1. "Dr Azad Zaman". பார்க்கப்பட்ட நாள் 15 March 2022.
  2. "Dr Azad Zaman". பார்க்கப்பட்ட நாள் 12 March 2022.
  3. "AZAD ZAMAN". பார்க்கப்பட்ட நாள் 9 December 2020.
  4. "Azad Zaman(Indian National Congress(INC)):Constituency- RAJABALA(WEST GARO HILLS) - Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 9 December 2020.
  5. Meghalaya: Congress MLA from Rajabala Azad Zaman passes away
  6. "Thousands bid farewell to Rajabala MLA Azad Zaman". Shillong Times. 5 March 2021. https://theshillongtimes.com/2021/03/05/thousands-bid-farewell-to-rajabala-mla-azad-zaman-2/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசாத்_சமான்&oldid=3840214" இலிருந்து மீள்விக்கப்பட்டது