ஆசாத் மூப்பன்

ஆசாத் மூப்பன் (Azad Moopen பிறப்பு: ஏப்ரல் 15, 1953, கல்பகஞ்சேரி - கேரளா) ஒரு இந்திய சுகாதார தொழில்முனைவோர், மருத்துவர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு நடத்தப்படும் அஸ்தர் டி.எம். சுகாதார நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார்.[1] ஆசியா-பசிபிக் பகுதியில் பல சுகாதார வசதிகளை உருவாக்க்கி வருபவர்.[2]

ஆசாத் மூப்பன்
Azad Moopen
பிறப்பு15 ஏப்ரல் 1953 (1953-04-15) (அகவை 70)
கல்பாக்கஞ்சேரி, கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்
பணிமருத்துவர், முதலீட்டாளர், வர்த்தகர்
சொத்து மதிப்பு1 பில்லியன் அமெரிக்க டாலர்
விருதுகள்
வலைத்தளம்
asterdmhealthcare.com

2010 ஆம் ஆண்டு அவருக்கு பிரவாசி பாரதீய சம்மான் விருதும், 2011 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது..[3] போர்ப்ஸ் பத்திரிக்கையானது ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறந்த 100 இந்தியத் தலைவர்கள்" பட்டியலில் 6 வது இடத்தை தந்துள்ளது.[4] மேலும் அரேபிய பிசினஸ் பத்திர்க்கையின்படி "மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 50 பணக்கார இந்தியர்களில்" 29 வது இடத்தைப் தந்துள்ளது [5].

பிறப்பு தொகு

ஆசாத் மூப்பன் ஏப்ரல் 15, 1953 அன்று கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள கல்பகஞ்சேரி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரின் தந்தை எம்.ஏ.மூப்பன் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சமூகத் தலைவர் ஆவார்.

கல்வி தொகு

ஆசாத் மூப்பன் எம்.பி.பி.எஸ் படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர் மற்றும் கேரளாவின் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவத்தில் முதுகலை பட்டமும் மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தில் மார்பு நோய் (Chest Diseases) குறித்த பட்டையப்படிப்பும் படித்தவர்[6][7].

மேற்கோள்கள் தொகு

  1. Jagwani, Lohit (12 February 2014). "We are looking at a turnover of $1B by 2017: Azad Moopen, chairman of Aster DM Healthcare". VC Circle. Archived from the original on 5 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 5 May 2014.
  2. "Governing Board". Indian Business and Professional Council (IBPC) Dubai.
  3. Padma Awards Announced Ministry of Home Affairs, 25 January 2011
  4. "Top 100 Indian Leaders in UAE". Forbes. Archived from the original on 5 May 2014. பார்க்கப்பட்ட நாள் 5 May 2014.
  5. "50 Richest Indians in the GCC". Arabian Business. பார்க்கப்பட்ட நாள் 5 May 2014.
  6. "Sky is the Limit". The Financial Express. பார்க்கப்பட்ட நாள் 8 July 2014.
  7. "UAE-based Indian entrepreneur offers jobs to rescued nurses". 7 July 2014. பார்க்கப்பட்ட நாள் 8 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசாத்_மூப்பன்&oldid=3542425" இலிருந்து மீள்விக்கப்பட்டது