ஆசா கானே ஜெஹ்ரா

ஆசா கானே ஜெஹ்ரா (Aza Khane Zehra) என்பது ஐதராபாத்தின் கடைசி நிசாம், மிர் உஸ்மான் அலிகான் என்பவரால் அவரது தாயார் ஜெஹ்ரா பேகமின் நினைவாக கட்டப்பட்ட நினைவு சடங்குகளின் துக்கத்திற்கான ஒரு கூட்ட மண்டபமாகும். இது 1930களில் கட்டப்பட்டது. மேலும், ஐதராபாத்தின் தாருல்ஷிஃபாவில் உள்ள சலார் ஜங் அருங்காட்சியகத்திற்கு அடுத்ததாக முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.[1] இது ஜூதாமின் மொஹரம் காலத்தில் பரபரப்பாக இருந்தது. இது உஸ்மானியன் கட்டிடக்கலை எனப்படும் பாணியில் கட்டப்பட்டது. [1]

ஆசா கானே ஜெஹ்ரா
Aza Khana-E-Zohra Hyderabad.JPG
அமைவிடம்ஐதராபாத்து, இந்தியா
பரப்பளவு4,500 சதுர அடி
கட்டப்பட்டது1930[1]
கட்டிடக்கலைஞர்ஜெயின் யார் ஜங்
கட்டிட முறைஇந்தோ சரசனிக் பாணி (உஸ்மானிய பாணி)

வரலாறுதொகு

கடைசி நிசாம் அவரது தாயார் "அம்துல் ஜெஹ்ரா பேகத்தை" மிகவும் நேசித்தார். அவர் இறந்த பிறகு இந்த நினைவுச்சின்னத்தை அவரது நினைவாக கட்டினார். இது தென்னிந்தியா முழுவதிற்குமான மிகப்பெரிய நினைவுச் சடங்குகள் நடத்தும் மண்டபமாகும். [2]

இது "மாதர்-இ-தெக்கான் அஷுர்கானா"( நினைவுச் சடங்குகள் நடத்தும் இடம்) என்றும் அழைக்கப்படுகிறது - இதன் பொருள் "தக்காணத்தின் தாயின் அஷுர்கானா", இதில் ஜெஹ்ரா பேகம் "தக்காணத்தின் தாய்" என்று போற்றப்படுகிறார் [1]

கட்டிடக்கலைதொகு

இது ஒரு நேரத்தில் 25,000 பேர் கூடுமளவுக்கு இடமளிக்கிறது. [3] மண்டபத்தின் சுவர்கள் மற்றும் கூரை சிக்கலான-பற்சிப்பி வேலைகளால் மூடப்பட்டுள்ளது. இது குர்ஆனின் வசனங்களையும், முகம்மது நபி மற்றும் அலீ குடும்பத்தின் சொற்களையும் சித்தரிக்கிறது. [2]

இது 45 அடி உயர உச்சியைக் கொண்டுள்ளது. இது 1999 ஆம் ஆண்டில் " ஐதராபாத் நகர மேம்பாட்டு ஆணையம் - கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் பாரம்பரிய விருதை" வென்றது.

மேலும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Aza Khana-e-Zehra Hyderabad Telangana Tourism".
  2. 2.0 2.1 "Aza Khana E Zehra – A Grand Ashurkhana (Ashurkhana)".
  3. "Aza Khana e Zehra, a monument for mourners".

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசா_கானே_ஜெஹ்ரா&oldid=3145968" இருந்து மீள்விக்கப்பட்டது