ஆசியக் கிண்ணம் 1990-91
1990-91 ஆசியக் கிண்ணம் (1990-91 Asia Cup), நான்காவது ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டச் சுற்றுப் போட்டி. இது 1990 டிசம்பர் 25 முதல் 1991 ஜனவரி 4 வரை இந்தியாவில் இடம்பெற்றது. வங்காள தேசம், இந்தியா, இலங்கை ஆகிய மூஉன்று அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்றன. பாகிஸ்தான் அணி அரசியல் காரணங்களுக்காக இத்தொடரில் பங்குபற்ற்றவில்லை.
நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்ட வாரியம் |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | ரொபின் சுற்று |
நடத்துனர்(கள்) | இந்தியா |
வாகையாளர் | இந்தியா (3வது-ஆம் தடவை) |
மொத்த பங்கேற்பாளர்கள் | 3 |
மொத்த போட்டிகள் | 4 |
தொடர் நாயகன் | ? |
அதிக ஓட்டங்கள் | ? |
அதிக வீழ்த்தல்கள் | ? |
ரொபின் சுற்று முறையில் நடந்த இச்சுற்றில் ஒவ்வோர்ர் அணியும் மற்றைய அணியுட ஒரு முறை ஆடியது. அவற்றில் முதலிரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று மூன்றாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது.