ஆசியச் சமூகம்

ஆசியச் சமூகம் (Asiatic Society) சனவரி 15, 1784இல் வில்லியம் ஜோன்சால் நிறுவப்பட்டது; பிரித்தானிய இந்தியாவின் அப்போதையத் தலைநகராக விளங்கிய கொல்கத்தாவில் இருந்த வில்லியம் கோட்டையில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக விளங்கிய இராபர்ட் சாம்பர்சு தலைமையில் நடந்த கூட்டத்தில் கிழக்கத்திய பண்பாட்டுக் கூறுகளை ஆய்ந்தறியும் நோக்குடன் இது நிறுவப்பட்டது.

ஆசியச் சமூகம்
Logo of the Asiatic Society of Bengal in 1905 depicting Sir William Jones.png
நிறுவப்பட்டது1784
அமைவிடம்1 பார்க் சாலை
கொல்கத்தா – 700016
மேற்கு வங்காளம், இந்தியா
வகைஅருங்காட்சியகம்
இயக்குனர்மிகிர் குமார் சக்கரவர்த்தி
தலைமைபிசுவநாத் பானர்ச்சி
வலைத்தளம்asiaticsocietycal.com
ஆசியச் சமூகக் கட்டிடம். ஏப்ரல் 2013.

1832இல் இதன் பெயர் "வங்காளத்தின் ஆசியச் சமூகம்" (Asiatic Society of Bengal) எனப் பெயர் மாற்றப்பட்டது; மீண்டும் 1936இல் இது "வங்காளத்தின் அரச ஆசியச் சமூகம்" எனவும் இறுதியாக சூலை 1, 1951இல் தற்போதுள்ளவாறு ஆசியச் சமூகம் என்றும் மாற்றப்பட்டது. இச்சமூகம் கொல்கத்தாவின் பார்க் சாலையில் அமைந்துள்ள இதன் கட்டிடத்தில் உள்ளது. 1808இல் இக்கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்தது. 1823இல் உருவான கொல்கத்தா மருத்துவ இயற்பியல் சமூகம் தனது அனைத்துக் கூட்டங்களையும் இங்குதான் நடத்துகின்றது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியச்_சமூகம்&oldid=3353536" இருந்து மீள்விக்கப்பட்டது