ஆசிய வரலாறு
ஆசியாவின் வரலாறு, தெற்காசியா, கிழக்காசியா மற்றும் நடு ஆசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வராலாற்றுத் தொகுப்பாகும். இவ்வரலாறு பல்வேறு ஆறு, கடல் சார்ந்த நாகரிகங்களின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது. ஆசியப் பள்ளத்தாக்குகள், ஆற்றுப்படுகைகள் உலகின் முக்கிய நாகரிகங்களான சிந்து சமவெளி, அரப்பா, மெசொப்பொத்தேமியா, சீன மற்றும் எகிப்து நாகரிகங்களை வளர்த்தெடுத்த நாகரிகத்தொட்டில்களாகும். வளமான நிலங்கள், தட்ப வெப்ப நிலைகள் போன்றவை முக்கியப் பயிர்களை வளர்த்தெடுக்கக் காரணமாய் அமைந்தன. மக்கள் வாழத்தகுந்த நிலப்பரப்பாதலால் கிராமம், நகரம் உள்ளிட்ட சமூகங்களாக அந்நாகரிகங்கள் அமைந்திருந்தன. இச்சமூகங்கள் கணிதம், அறிவியல், கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சி பெற்றிருந்தன. சமூகங்கள் சிற்றரசுகளாகவும், பேரரசுகளாகவும் ஆட்சி செய்தன.
பட்டு வர்த்தகம் சார்ந்த பண்டைய வணிகம் ஆசிய நாடுகளுக்கிடையே ஒரு இணைப்புக்காரணியாக விளங்கியது. பட்டு வர்த்தகத்தோடல்லாமல் ஏனைய கலை, பண்பாடு மற்றும் பிற வணிக பண்டமாற்றிலும் ஆசிய நாடுகள் இணக்கமாயிருந்தன. இவற்றின் வரலாறு மற்றும் ஆட்சிப் பரவல் காலக்கோட்டில் பல்வேறு ஆசிய நாடுகள் மலரக் காரணமாயிருந்தன.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The World's First Temple". Archaeology magazine. November–December 2008. p. 23.
- ↑ "The Indus Valley Civilisation". ThinkQuest. Archived from the original on 9 May 2013. பார்க்கப்பட்ட நாள் 9 February 2013.
- ↑ Stein, B. (1998), A History of India (1st ed.), Oxford: Wiley-Blackwell, pp. 119–122, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-631-20546-3