ஆடம் ஓப்பெல்

ஆடம் ஓப்பெல் (Adam Opel, மே 9, 1837 - செப்டெம்பர் 8, 1895) என்பவர் ஆடம் ஓப்பெல் என்னும் செருமானிய தானுந்து நிறுவனத்தைத் தொடங்கியவர்.[1]

ஆடம் ஓப்பெல்
பிறப்பு(1837-05-09)9 மே 1837
ரூசல்சைம், செருமனி
இறப்பு8 செப்டம்பர் 1895(1895-09-08) (அகவை 58)
ரூசல்சைம், செருமனி
தேசியம்செருமானியர்
பணிவணிகம்
அறியப்படுவதுஓபெல் கும்பினியின் நிறுவனர்
வாழ்க்கைத்
துணை
சோபியா
பிள்ளைகள்கார்ல், வில்லெம், ஐன்ரிச், பிரீட்ரிக், லுத்விக்

வாழ்க்கை வரலாறு

தொகு

ஆடம் ஓப்பல் மே 9, 1837-இல் செருமானிய நாட்டில் உள்ள ரூசல்சைம் என்னும் ஊரில் வில்ஹெல்ம் என்னும் பூட்டு செய்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தன்னுடைய தந்தையிடம் தனது 20-ஆம் வயது வரை தொழில் கற்றுக்கொண்டார். பின்னர் இவர் புருசல்சு நகரிலும் அதற்குப் பின் பாரிசு நகரிலும் தொழில் பழகுவதற்காகச் சென்றார். பாரிசில் இருந்தபோது அப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தையல் இயந்திரத்தின் மீது விருப்பம் கொண்டார். அந்த இயந்திரத்தைப் பற்றி நன்றாக அறிந்து கொள்வதற்காக ஓப்பெல் 1859-ஆம் ஆண்டு தையல் இயந்திரம் தயாரிப்பவர் ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது இவரது தம்பி கியார்கும் தொழில் கற்றுக்கொள்ள பாரிசு வந்தார். 1862-இல் ஆடம் ஓப்பெல் ரூசல்சைம் திரும்பினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Hessian Biography : Extended Search : LAGIS Hessen". www.lagis-hessen.de. பார்க்கப்பட்ட நாள் 2023-03-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடம்_ஓப்பெல்&oldid=4132887" இலிருந்து மீள்விக்கப்பட்டது